ஃபலஸ்தீனின் 85 சதவீத நிலப்பரப்பும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்!

0
ராமல்லா: ஃபலஸ்தீனில் 85 நிலப்பகுதியும் இஸ்ரேல் ஆக்கிரமித்தபோது மக்கள் தொகையில் 48 சதவீத ஃபலஸ்தீன மக்கள் 15 சதவீத நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றார்கள்.ஃபலஸ்தீனியன் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ்(பி.எஸ்.பி.ஸ்) இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.ஒரு ஃபலஸ்தீனியரை விட 5 மடங்கு நிலப்பகுதி ஒரு இஸ்ரேலியருக்கு சொந்தமாக உள்ளன.ஆண்டு தோறும் இஸ்ரேல், ஃபலஸ்தீன் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது.ஃபலஸ்தீன் மக்களின் வீடுகளை இடிப்பதோடு, புதிய கட்டிடங்களை கட்டுவதற்கான அனுமதியும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
அல்மக்தீஸி இன்ஸ்ட்யூட்டின் புள்ளிவிபரங்கள் கூறுவது,’2000-2014 காலக்கட்டத்தில் கிழக்கு ஜெருசலமில் 1,342 கட்டிடங்களை இஸ்ரேல் அதிகாரிகள் இடித்துள்ளனர்.இதன் மூலம் 5,760 பேர் அகதிகளாகியுள்ளனர்.இக்காலக்கட்டத்தில் 340 பேர் தங்களது சொந்த வீடுகளை இடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத்தாக்குதலில் 9000 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.47,000 வீடுகள் பாதி அளவில் சேதமடைந்தன.327 பள்ளிக்கூடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.மேலும் 6 பல்கலைக் கழகங்கள் பாதி அளவில் சேதமடைந்தன.
இஸ்ரேல் மக்கள் தொகையில் பாதிபேரும் ஜெருசலத்தில் வசிக்கின்றனர்.2013 ஆம் ஆண்டு மேற்கு கரையில் 409 யூத குடியிருப்பு மையங்கள் கட்டப்பட்டன.செங்கடலுடன் இணைந்த ஃபலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் ஃபலஸ்தீன் அரசு சுற்றுலா திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இஸ்ரேல் தடுத்து வருகிறது.
இஸ்ரேலிய யூதக் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் மற்றும் திடக் கழிவுகள் எல்லாம் ஃபலஸ்தீன் கட்டுப்பாட்டில் உள்ள கடலோரப் பகுதிகளில் தள்ளப்படுவதாக இஸ்ரேலிய இன்ஃபர்மேஷன் சென்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அறிக்கை கூறுகிறது.

Comments are closed.