ஃபலஸ்தீன்:இள வயது சிறைவாசி விடுதலை

0

 

இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இள வயது சிறைவாசியான மலக் அல் கதீப் பிப்ரவரி 13 அன்று விடுதலை செய்யப்பட்டார்.இஸ்ரேலிய படைகள் மீது கற்களை வீசியதாகவும் கத்தியை வைத்திருந்ததாகவும் பதினான்கு வயதான மலக் அல் கதீபிற்கு இரண்டு மாதங்கள் சிறை தண்டனையை இஸ்ரேலிய நீதிமன்றம் வழங்கியது.அத்துடன் 6000 இஸ்ரேலிய ஷெகல்கள் அபராதமும் விதித்தது.
இரண்டு மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு மலக் அல் கதீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தன்னை நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியதாக விடுதலைக்கு பிறகு அல் கதீப் தெரிவித்தார்.
இஸ்ரேலிய சிறைகளில் தற்போது 280 குழந்தைகள் அடைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவிக்கிறது. அவர்களில் மலக் அல் கதீப் இளவயது சிறைவாசியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.