ஃபலஸ்தீன் விற்பனைக்கு அல்ல

0

ஃபலஸ்தீன் விற்பனைக்கு அல்ல

1901ல் சியோனிஸத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியோடர் ஹெசில், உதுமானிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னர் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதிடம் ஃபலஸ்தீனின் நிலங்களில் யூத குடியிருப்புகள் அமைப்பதற்கு அனுமதி கேட்டு தூது விட்டார். பின்னர் தியோடரே நேரடியாக சுல்தானிடம் இதுகுறித்து பேசவும் செய்தார். இதற்கு பிரதிபலனாக சாம்ராஜ்ஜியத்தின் கடன்களை அடைப்பதாகவும் ஐரோப்பிய நாடுகளில் சுல்தானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாகவும் பேரம் பேசினார். உதுமானிய சாம்ராஜ்யம் அப்போது மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கு சில உள்ளூர் சக்திகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்பாடு செய்து உதவியும் செய்து வந்தன.

ஹெசிலின் கோரிக்கையை உடனடியாக மறுத்த சுல்தான் அப்துல் ஹமீது கூறிய வார்த்தைகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். “இந்த நிலத்தின் ஓர் அணுவளவைக் கூட நான் விற்கமாட்டேன். ஏனென்றால் இந்த நிலம் எனக்கு சொந்தமானதல்ல, ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. எனது முன்னோர்கள் இந்த நிலங்களை தங்களின் ரத்தத்தை கொண்டு வென்றுள்ளார்கள்” என்று கூறினார். அத்துடன் “நான் உயிருடன்  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.