“ஃபாசிசக் கோரப் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க அரசியலில் உத்வேகத்துடன் முன்னேற வேண்டும்!” – இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கருத்தரங்கில் வேண்டுகோள்!

0

ஷார்ஜா: “ஃபாசிச அரசியலின் கோரப் பிடியிலிருந்து இந்திய மக்களை விடுவிக்க அரசியலில் உத்வேகத்துடன் முன்னேற வேண்டும்” என்று ஷார்ஜாவில் நடந்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் கருத்தரங்கில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி (ICS) ஷார்ஜாவில் கடந்த 09.01.2015 வெள்ளியன்று நடத்திய மாபெரும் கருத்தரங்கில் அமீரக தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

“இந்தியாவின் இறையாண்மையைக் காப்பாற்றிட முஸ்லிம்களும், ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களும் அரசியலில் மிக வீரியமாக முன்னேற வேண்டும். ஹிந்துத்துவாவின் கட்டாய வெறுப்பு மற்றும் திணிப்பு அரசியலை உணர்ந்து உறுதியுடனும், விவேகத்துடனும் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என்று அவர் தனது சிறப்புரையில் கூறினார்.

முன்னதாக ஷார்ஜா மண்டலப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கினார்.

Rahman

அமீரக பொதுச் செயலாளர் முஹம்மது முனவ்வர் தலைமையுரை ஆற்றினார். அவர்கள் தனது உரையில் இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்க SDPI உருவான காரணத்தையும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் பணிகளையும் எடுத்துரைத்தார்.

muna

ஷார்ஜா மண்டல தலைவர் ஆடிட்டர் ஹசன் முன்னிலை வகித்தார்.

அடுத்து, சிறப்புரையாற்றிய இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரக தமிழ் மாநிலக் பொதுந் செயலாளர் வலசை ஃபைஸல் அவர்கள் தனது சிறப்புரையில் மேலும் கூறியதாவது:

இந்தியாவை ஒருமைப்படுத்தியது முஸ்லிம்கள். இந்தியாவுக்கு முஸ்லிம்கள் செய்த சேவையைச் சொல்வதென்றால் இது ஒன்று போதும். இந்தியா என்னும் நாட்டை உருவாக்கவும், இந்திய விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரும் பாடுபட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள் முஸ்லிம்கள்.

ஆதிக்க சக்திகளுக்கெதிராக விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் முஸ்லிம்கள். அப்படி தியாகம் செய்துள்ள முஸ்லிம்களின் நிலை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மிகுந்த பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த உரிமைகள் கூட இன்று இல்லை. இந்நிலையை மாற்ற முஸ்லிம் சமுதாயம் அரசியல் தளத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்று நாம் போராடுகிறோம், கவலைப்படுகிறோம்.

ஆனால் இந்நிலைக்கு முக்கிய காரணம் அரசியல் தளத்தில் நாம் வலுவாக கால் பதிக்காததே. அரசியலில் வலுவாக காலூன்றிய சமூகங்கள் எல்லா துறைகளிலும் முன்னேறியுள்ளன. அது இல்லாத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ளனர்.

முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதில் அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). துவங்கிய குறைந்த காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக SDPI வளர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் நம்பிக்கையாக எஸ்.டி.பி.ஐ திகழ்கின்றது.

இந்திய முஸ்லீம்களின் வரலாற்றையும், சுதந்திரதிர்க்காக போராடிய முஸ்லீம்களின் தியாகத்தையும், சுட்டிக்காட்டி அப்படிப்பட்ட முஸ்லீம்களின் இன்றைய நிலையையும், ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கங்களும் செய்த துரோகத்தையும் தோலுரித்து காட்டினர், அதுமட்டுமல்லாமல் சங்க்பரிவார கும்பல்களின் பயங்கரவாதத்தையும் சதி செயல்களையும் பட்டியலிட்டார். மேலும் மாற்று அரசியல் இன்றைய கால கட்டத்தின் அவசியம் என்றும் அதற்க்கு SDPI கட்சி ஒன்றே தீர்வு என்றும் எடுத்துரைத்து இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியில் இணையவேண்டி அழைப்பு விடுத்தார்.

பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை சமூகம் உணர்ந்து வீரியத்துடன் நமது உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு தொடர்ந்து ஆக்கபூர்வமான, தன்னலமற்ற அரசியல் பணிக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி தனது முழு பங்களிப்பையும் கொடுக்கும்.

இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் உறுப்பினர் சேர்க்கை படிவம் வெளியிடப்பட்டது. அதில் அமீரக தலைவர்கள் முன்னிலையில் திரளாக மக்கள் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியில் இணைந்தனர்.

7

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் கேரள மாநிலத் தலைவர் ஷரீஃப் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

sher

இறுதியாக, ஷார்ஜா மண்டல செயலாளர் முஜீப் அவர்கள் நன்றியுரை நவின்றார்.

muje

கலந்துகொண்டவர்கள் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நிர்வாகிகளிடம் கைலாகு கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

guest

8

9

10

11

12

Comments are closed.