ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி: பிரிவினைவாத சத்திகளுக்கு எதிராக போராட உறுதி

0

சமீபத்தில் நடந்து முடிந்த ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான், வலது சாரி மரைன் லே பெண் என்பவற்றை தோற்கடித்து இமாலைய வெற்றி பெற்றார். வெற்றிபெற்றதும் அவர் தனது உரையில், “உங்களின் பெரும்பாலானோர் வெளிப்படுத்திய கோபம், கவலை மற்றும் சந்தேகங்களை நான் அறிவேன். நான் எனது முழு சக்தியைக் கொண்டு நம்மை பலகீனப்படுத்தும் பிரிவினைக்கு எதிராக போராடுவேன்.’ என்று அவர் கூறியுள்ளார்.

ஃபிரான்ஸ் நாட்டு வரலாற்றில் மிக இளம் வயதில் பிரதமராகும் முதல் நபர் இவர் தான் என்பது குறிபிடத்தக்கது. இவர் ஐரோப்பா மற்றும் தங்களது குடிமக்களுடனான இணைப்பை தான் மறு கட்டமைப்பு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஃபிரான்ஸின் வரலாற்றில் புதிய பக்கம் தற்போது திரும்பியுள்ளது என்று தனது வெற்றியை குறித்து அவர் தெரிவித்துள்ளார் .

தனது வெற்றிப் பேரணியில், பாராளுமன்ற பெரும்பான்மையை உருவாக்குவது குறித்தும் பல மாற்றங்களை ஃபிரான்சில் செய்வதற்கு அது மிக முக்கியம் என்றும் வருகிற ஐந்து வருடங்களில் தன்னால் என்னென்ன முடியுமோ அத்துனையும் தான் செய்யப் போவதாகவும் அதனால் வலது சாரியினருக்கு இனிமேல் எவரும் வாக்களிக்கு எந்த காரணமும் இல்லாமல் போய்விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக பல தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளான ஃபிரான்ஸ் மொத்தம் 230 நபர்களை இந்த காலகட்டத்தில் தீவிரவாதத்திற்கு பலி கொடுத்துள்ளது. இந்நிலையில், தனது தலைமையிலான ஆட்சியில் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஃபிரான்ஸ் முன்னிலையில் இருக்கும், என்று கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் மேக்ரானிற்கு 65 இல் இருந்து 66.1 % வாக்குகள் பதிவாகியுள்ளனர். இவருடன் போட்டியிட்ட லே பெண்ணிற்கு 33.9 இல் இருந்து 35% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவு என்பது மேக்ரானை குறிவைத்து தேர்தலில் கடைசி நிமிடத்தில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலையும் மீறி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் வெற்றியை தொடர்ந்து யூரோவின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்த தேர்தல் முடிவு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கக் கூடியதாக இருந்தது. முன்னதாக பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்த நிலையில் இந்த தேர்தலில் போயிட்ட லே பெண் அதே முடிவை ஃபிரான்சிற்கும் முன்வைத்தார். ஆனால் மேக்ரான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான முடிவை எடுத்திருந்தார்.

இத்தேர்தலில் லே பெண் தோல்வி அடைந்தாலும், ஃபிரான்சில் வலது சாரிகளுக்கு கிடைத்த வாக்குகளில் இது வரலாறு காணாத சதவிகிதம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது கட்சியான National Front Party கட்சியில் சில மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் அது ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய தேர்தலில் வெற்றிபெற்ற மேக்ரானுக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேக்ரானுக்கு முன், வேலையில்லா திண்டாட்டம், பிரிவினைவாதம், தொழிலாளர் சட்ட திருத்தங்கள் என்று பல சவால்கள் உள்ள நிலையில் அதனை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஃபிரான்ஸ் மக்களிடையே அதிகரித்துள்ளது.

Comments are closed.