ஃபேஸ்புக்கில் நிறவெறி பிரச்சாரத்திற்கு இடமில்லை

0

நியூஸிலாந்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, நிறவெறியர்கள் நடத்தும் வெள்ளை தேசியவாத பேச்சுக்களையும், நிறவெறி கொண்ட பிரிவினைவாத பதிவுகளையும், தடை செய்ய பேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஃபேஸ்புக்கில் இனவெறி, நிறவெறி பதிவுகள் தடை செய்யப்பட்டு வந்தாலும்,  சமீப காலங்களில் அவை வேறு விதமாக பரவி வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக  சமீபத்தில் நியூஸிலாந்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல். இந்த தாக்குதலில், வெள்ளையர்களுக்கு தனி தேசம் வேண்டும் என்று பிரச்சரம் செய்யும் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி தான் என்று பரவ தொடங்கியது. அந்த தீவிரவாதி இரண்டு மசூதிகளுக்குள் சென்று, அங்குள்ள இஸ்லாமியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். அதை பேஸ்புக்கில் லைவ் செய்தார். இந்த வீடியோவை பேஸ்புக் நிறுவனம் கண்டறிந்து தடை செய்வதற்குள் ஆயிரக்கணக்கனோர் பார்த்துவிட்டனர்.

இந்த நிலையில், வெள்ளை தேசியவாத பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் மற்றும் இனவெறி பிடித்தவர்களின் பிரிவினைவாத பதிவுகளிளை பேஸ்புக் தடை செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், இனி வெள்ளை தேசியவாதம், பிரிவினைவாத பேச்சுக்களை பேஸ்புக் தடை செய்யும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “இதுபோன்ற பதிவுகளுக்கும், நிறவெறி பிடித்த அமைப்புகள் மற்றும் வெறுப்புணர்வு பரப்புபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதால், அவற்றுக்கு பேஸ்புக்கில் இடமில்லை” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments are closed.