ஃபேஸ்புக்கும் இந்திய தேர்தலும்

0

ஃபேஸ்புக்கும் இந்திய தேர்தலும்

சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இக் காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களும் சமூக ஊடகங்களில் அனல் பறக்கின்றன. களத்தில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்திற்கு இணையாக, இன்னும் சொல்வதென்றால் அதைவிட அதிகமான பிரச்சாரம் இன்று சமூக ஊடகங்களில்தான் மேற்கொள்ளப்படுகிறது. சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவை இவற்றுக்கான சாதனங்களாக பல்வேறு தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையைச் சொல்லி பிரச்சாரம் செய்வதை விட பொய்யையும் புரட்டையும் முன்வைத்தே சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.  பல்வேறு தரப்பினர் இவற்றை பயன்படுத்தினாலும் தவறான வழியில் இதனை பயன்படுத்துவதில் வலதுசாரி இந்து அமைப்புகள் முன்னணியில் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் பொய்ச் செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவதில் மற்ற அனைவரையும் பின்னுக்கு தள்ளியுள்ளனர்.

ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தல்கள் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்கள் மூலம் திசை மாற்றப்படுவதையும் அவற்றை சரி காண்பதற்கு ஃபேஸ்புக் நிர்வாகம் முறையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பதையும் புதிய விடியல் இதழில் (மார்ச் 16 & 31) ஃபேஸ்புக்கும் தேர்தலும்’ என்ற தலைப்பில் விரிவாக விளக்கி இருந்தோம். தற்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் சூழலில் சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஃபேஸ்புக் நிர்வாகம் மேற்கொண்டு இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சார்ந்த ஏறத்தாழ ஆயிரம் ஃபேஸ்புக் கணக்குகள், பக்கங்கள் மற்றும் குழுக்களை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 103 பக்கங்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கணக்குகளை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவாளர்கள் பக்கம் மற்றும் கஷ்மீர் குறித்த சில பக்கங்கள் இவற்றில் அடங்கும்.

இந்தியாவைச் சேர்ந்த முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவோடு தொடர்புடைய 687 ஃபேஸ்புக் கணக்குகள் மற்றும் பக்கங்களையும் நீக்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதனை கேள்விபட்ட சங்பரிவார் அமைப்பினர் குதூகலித்தனர். சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்களை பரப்புகிறது, அதன் மூலம் மக்களை வழி கெடுக்கிறது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் குஜராத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சில்வர் டச் என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய 15 ஃபேஸ்புக் கணக்குகள் மற்றும் பக்கங்களையும் ஃபேஸ்புக் நீக்கி உள்ளது.  இந்தப் பக்கங்கள் அனைத்தும் பா.ஜ.க. ஆதரவு செய்திகளையும் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு செய்திகளையும் அதிகம் பகிரும் பக்கங்களாகும். அகமதாபாத் நகரில் இருந்து செயல்படும் இந்த நிறுவனம்தான் பிரதமர் நரேந்திர மோடியின் செயலியான நமோ செயலியையும் வடிவமைத்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.