ஃபேஸ்புக்கும் தேர்தல்களும்

0

ஃபேஸ்புக்கும் தேர்தல்களும்

நண்பர்கள் மத்தியில் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காக தொடங்கப்பட்ட ஃபேஸ்புக், நாடுகளின் தேர்தல்களை திசை திருப்பும் சக்தியாக மாறும் என்பதை அதன் உரிமையாளர் மார்க் ஜக்கர்பர்க் முன்னரே அறிந்திருந்தாரா என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது அதுதான் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவாகவோ எதிராகவோ மக்களின் எண்ணத்தை திசை திருப்பும் சக்தியாக ஃபேஸ்புக் இன்று உருமாறி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், இங்கிலாந்தில் நடைபெற்ற பிரக்சிட் ஆகியவற்றில் ஃபேஸ்புக்கின் தாக்கம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, 2016ல் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஃபேஸ்புக் மூலம் பல பொய் செய்திகள் பரப்பப்பட்டதாக கூறப்பட்டது. ரஷ்ய அரசாங்கம் உள்ளிட்ட பல சக்திகள் இந்த பொய் செய்திகளை பரப்பியிருக்கலாம் என்று அமெரிக்க அரசாங்கத்தின் விசாரணை தெரியப்படுத்தியது. ஏறத்தாழ 8 கோடி 70 லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்களின் விபரங்களை அவர்களின் அனுமதியில்லாமல் கேம்பிரிட்ஜ் அனேலடிகா நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனம் டொனால்ட் ட்ரம்பின் பிரச்சாரத்துடன் தொடர்பில் இருந்த நிறுவனம். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முகமாக ஃபேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு கேள்விகளால் துளைக்கப்பட்டார். இதில் தனது நிறுவனத்தின் தவறுகளை அவர் ஒப்புக் கொண்டார்.

கேம்பிரிட்ஜ் அனேலடிகா விவகாரத்தை தொடர்ந்து சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் ஃபேஸ்புக் தலைமை பொறுப்பில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியது. சென்ற வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற இந்த விசாரணையில் ஃபேஸ்புக்கின் ஆசியா & -பசிபிக் பிராந்திய பொதுக் கொள்கை துறையின் துணை தலைவர் சைமன் மில்னர் கலந்து கொண்டார். டிவிட்டர் மற்றும் கூகுள் நிர்வாகிகளும் விசாரணையை எதிர்கொண்ட போதும் ஃபேஸ்புக் நிர்வாகியிடமே கடுமையான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அந்நாட்டின் சட்ட அமைச்சர் சண்முகம், மூன்று மணிநேரம் சைமனிடம் விசாரணை நடத்தினார். பயனாளர்களின் தகவல்களை பாதுகாக்க தாங்கள் இன்னும் அதிக கவனம் எடுத்திருக்கலாம் என்று சைமன் விசாரணையின் போது தெரிவித்தார். … ???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ????????? ????? ?????????

Comments are closed.