ஃபேஸ்புக் பதிவினால் ஓடிஷாவில் கலவரம்

0

ஓடிஷாவில் இந்துக் கடவுளை அவமதித்து சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட கருத்து ஒன்றை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓடிசாவின் கடலோரப்பகுதியான பத்ரக்கில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த அஜித் குமார் பதிகரி என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் ராம நவமியன்று சிலர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததை தொடந்து விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் இந்த கருத்துக்களை பதிந்தவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் அப்பகுதியில் உள்ள பல கடைகள் சூரையடபப்ட்டன. வாகனங்களுக்கு, கடைகளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பத்ரக் பகுதி போர்களமாக காட்சியளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சாலைகளில் வாகன டையர்கள் கொளுத்தப்பட்டு அவை முடக்கப்பட்டுள்ளன. கடைகள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை செயல்களில் காவல்துறை வாகனங்களும் தப்பவில்லை.

இப்பகுதியில் நிலைமையை அமைதி படுத்த 15 காவல்துறை படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தை தொடர்ந்து இரு சமூகத்தை சேந்த 35 பேருகளுக்கும் மேல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு தரப்பினரின் சார்பில் மூன்று தனித்தனி முதல் தகவல் அறிக்கைகள் பத்ரக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் நிலைமை மோசமடைந்ததற்கு காரணம் முறையற்ற நிர்வாகம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியல் கடந்த மார்ச்  31 இல் இருந்து மாவட்ட கலக்டர் எவரும் இல்லை என்றும் அவர்கள் தெரிவிதுள்ளனர்.

Comments are closed.