ஃபேஸ்புக் மற்றும் கூகுள் விளம்பரத்திற்கு ரூ.21 கோடி செலவலித்த பாஜக முதலிடம்!

0

சமூக வலைதளங்களில் பல கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை நடத்தின. போலி செய்திகள், தேர்தல் விதிமுறைகளை மீறிய செய்திகள் ஆகியவை வெளியாகக்கூடாது என்பதில் சமூக வலைதள நிறுவனங்களும் கவனமாக இருந்தன. ஆனால் அதையும் மீறி பல செய்திகள்  பரப்பப்பட்டன. இந்நிலையில் தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி மாதம் முதல் தேர்தல்  முடிவடைந்த மே மாதம் வரை ஃபேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களில் அரசியல் கட்சிகள் அதிகளவு விளம்பரங்களைச் செய்துள்ளன. இதில், பாரதிய ஜனதா கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக 4 கோடியே 23 லட்சம்  ரூபாய் செலவிட்டு முதலிடத்தில் உள்ளது.

இதேபோல், கூகுளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு பாஜக விளம்பரங்கள் செய்துள்ளது.  எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்காக ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. கூகுளில் விளம்பரங்கள் செய்ததற்காக 2  கோடியே 71 லட்சம் ரூபாயை காங்கிரஸ் செலவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக ரூ.29.28 லட்சம் செலவு செய்துள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்ய 13.62  லட்ச ரூபாயும், கூகுளில் விளம்பரம் செய்ய 2.18 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது.

Comments are closed.