ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக

0

ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக

மத்திய பாஜக அரசுக்குஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஃபேஸ்புக் மூலம் அதிக விளம்பரம் செய்து பாஜக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது.

ஃபேஸ்புக்கில் பாஜகவினர் பல்வேறு பெயர்களில் போல ஐடிக்கள் வைத்து இயக்கி வருகின்றனர். அப்படி செயல்படும் பக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுத்துள்ளது பாஜக.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 18 மாதங்களில் அதிக விளம்பரம் கொடுத்த 10 விளம்பரதாரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான அந்த பட்டியலில் பாஜக முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 18 மாதங்களில் ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 4.61 கோடி ரூபாயை பாஜக செலவு செய்துள்ளது. மேலும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அடுத்ததடுத்த 4 பக்கங்களும் பாஜகவின் ஆதரவு பக்கங்களாகவும், தொடர்பு பக்கங்களாகவும் உள்ளதும் தெரிவந்துள்ளது.

அதில், My First vote for modi என்ற பக்கம் கடந்த 18 மாதங்களில் ரூ.1.39 கோடிக்கு செலவிட்டுள்ளது. Bharat ke Mann ki Baat என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.2.24 கோடி செலவிட்டுள்ளது. Nation with Namo என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.1.28 கோடியும் செலவிட்டுள்ளது.

மேலும், இந்த 3 விளம்பரதாரர்கள் பாஜக தேசிய கட்சி அலுவலகத்தின் முகவரியை குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, My First vote for modi, Bharat ke Mann ki Baat ஃபேஸ்புக் பக்கங்களும் நாடாளுமன்ற தேர்தலுக்கு 4 மாதங்கள் முன்பு தான் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

இதன் மூலம் பாஜக மற்றும் அதன் தொடர்புடைய 4 ஃபேஸ்புக் பக்கங்களின் விளம்பர செலவு மொத்த விளம்பரத்தில் 64% ஆகும்.

Comments are closed.