ஃபைசல் கொலைவழக்கில் மேலும் மூன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது

0

கேரள மாநிலம் மலப்புரத்தில் தன் மனைவி மக்களுடன் இஸ்லாத்தை ஏற்ற ஃபைசல் என்ற நபரை அவரது குடும்பத்தினர் உட்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். (பார்க்க செய்தி).

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ப்ரஜீஸ் பாபு, அப்புஸ் மற்றும் குட்டப்பு ஆகிய மேலும் மூன்று நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.  இவர்களின் கைது மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருரங்காடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையை பொருத்தமட்டில் திரூர் பகுதி ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்த ப்ரஜீஸ் பாபு என்பவர் தான் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். ஃபைசலின் கொலைக்கு அப்பு மற்றும் குட்டப்பு உடந்தையாக இருக்க ப்ரஜீஸ் அவரை கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னத்தாக இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த  8 பேரை காவல்துறை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.