அகதிகளின் துயரங்கள்

0

அகதிகளின் துயரங்கள்

ஜூன் 20 சர்வதேச அகதிகள் தினம்

ஜூன் 20 சர்வதேச அகதிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு போர்கள், அந்நிய நாட்டின் அபகரிப்பு, மதமோதல்கள், இனவெறி தாக்குதல்கள், ஆதிக்கசக்திகளின் அடக்கு முறைகள், வளர்ச்சி என்ற பெயரில் வளங்களை அபகரித்து நிலங்களை பிடுங்கி விரட்டப்பட்ட மக்கள்..இவர்களே அகதிகள் என்று அடையாளப் படுத்தப்படுகின்றனர்.  ஒவ்வொரு நிமிடமும் 8 பேர் தங்கள் நாட்டை விட்டு அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சமடைகின்றனர் என்றும் சராசரியாக நாள் ஒன்றுக்கு நாட்டை விட்டு, தங்கள் வாழ்விடங்களை விட்டு ஏதோ காரணங்களுக்காக 28,300 பேர் வெளியேறுகின்றனர் என்றும் அறிக்கையை தருகிறது அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் (ஹிழிபிசிஸி- ஹிஸீவீtமீபீ ழிணீtவீஷீஸீs பிவீரீலீ சிஷீனீனீவீssவீஷீஸீ யீஷீக்ஷீ ஸிமீயீuரீமீமீs)

இதில் பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள் பாதிப்படைகின்றன. சிரியா, ஃபலஸ்தீன், ஈராக், ஆப்கான், பர்மா, வடஆப்ரிக்க நாடுகள், மற்றும் மெக்ஸிகோ, இலங்கை என்று இதன் பட்டியல் விரிகிறது. இதில் கடந்த 8 ஆண்டுகளில் சிரியாவில் மட்டும் 63 இலட்சம் மக்கள் வேறு இடங்களை தேடி இடம்பெயர்ந்துள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளில் சிலர் தங்களுடைய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு தனித்துவிடப்படுகிறார்கள் என்ற கூடுதல் அதிர்ச்சி தகவல்களும் வெளிவருகின்றன. அகதிகளாக்கப்பட்டவர் களில் பெரும்பாலனோர் இனவெறிக்கு உள்ளானவர்களே என்றும் ஐ.நா. வின் அறிக்கை கூறுகிறது. நிலத்தை இழந்தவர்கள், குடும்பத்தை பிரிந்தவர்கள், நாடற்றவர்களின் சோகங்கள் என அகதிகளின் துயரங்கள் நீள்கின்றன.

அகதிகள் உருவாக்கப்படுகிறார்கள்

“இது என்னுடைய கிராமம் என்பதற்காகச் சொல்லவில்லை. நிஜமாகவே அல் வலாஜா உலகிலேயே மிக அழகான ஓர் இடம்” என தனது ஃபலஸ்தீன் மண்ணிற்காக போராடக்கூடிய பெண்மணி ஷபியா அல் அராஜ் கூறுகிறார். “மேற்கு கரையில் அமைந்திருக்கும் அறியப்படாத, அதே சமயம் ஆபூர்வமான ஒரு சிறிய கிராமம் அல் வலாஜா. பாலைவனம் போல் வறண்டிருக்கும் நீண்ட நிலப்பகுதிகளின் மத்தியில் பச்சை நிறத்தில் படர்ந்திருக்கும் ஒரு பகுதி. ஆயிரமாண்டுகால உழைப்பின் காரணமாக ஃபலஸ்தீனர்கள் இந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த அதிசயத்தை எங்களால் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். எங்குமே என்னுடைய சொந்த கிராமத்தை போன்று நான் பார்த்ததில்லை. ஆனால் இன்று என் அழகிய கிராமம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் சீரழிந்து அங்குள்ள மக்களே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். என் கிராமம் அதன் தனித்துவத்தை இழந்து கொண்டிருக்கிறது. என் மக்கள் தங்களுடைய அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஃபலஸ்தீனின் துயரத்தை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இன்று என் கிராமத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். நாங்கள் எப்படி அகதிகளாக்கப்பட்டோம், நாங்கள் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு புரியும்.

இஸ்ரேல் என்னும் நாடு கள்ளத்தனமாக உருவான போதே அல் வலாஜாவும்  குறிவைக்கப்பட்டுவிட்டது. இந்த கிராமத்தின் 85% பகுதி ஏற்கெனவே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் சென்றுவிட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் 90% பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு கொண்ட மக்கள் இன்று வீடுகளையும், பயிர்நிலங்களையும் இழந்து நிற்கின்றனர். இங்கு உள்ள மக்கள் தற்போது உலகம் முழுக்க சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். எஞ்சிய மக்களும் தினமும் இஸ்ரேலின் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு ஒரு நாள் பெரிய பெரிய புல்டோஸர்களை எங்கள் கிராமத்திற்குள் கொண்டு வந்தார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.