அக்டோபர் மாதத்தில் 1000 ஃபலஸ்தீனியர்கள் கைது

0

அக்டோபர் மாதத்தில் இதுவரை ஆயிரம் ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளதாக ஃபலஸ்தீனியன் பிரிசனர்ஸ் க்ளப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் 87 நபர்களை இஸ்ரேல் நிர்வாக கைது என்ற முறையின் கீழ் கைது செய்துள்ளது. இதன்படி கைது செய்யப்படும் ஒரு நபரை விசாரணை இன்றி ஆறு மாதங்கள் சிறையில் வைப்பதுடன் அதனை காலவரையின்றி நீட்டிக்கவும் முடிவும்.
இந்த மாதம் அதிகப்படியாக 221 ஃபலஸ்தீனியர்கள் ஹெப்ரான் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நகரில் இரண்டு இலட்சம் ஃபலஸ்தீனியர்களுக்கு மத்தியில் ஐநூறு இஸ்ரேலியர்கள் குடியேற்ற பகுதிகளில் சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர கிழக்கு ஜெரூஸலத்தில் 201 நபர்களும் ரமல்லாவில் 138 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் யூதர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதை கண்டித்து கடந்த மாத இறுதி முதல் ஃபலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். இதனை மூன்றாது இன்திஃபாதா – மக்கள் எழுச்சி என்றே பெரும்பான்மையினர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Comments are closed.