அசாராம் பாபுவிற்கு பிணை மறுத்த உச்ச நீதிமன்றம்: 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு

0

பாலியல் குற்றம் தொடர்பாக சிறையில் உள்ள போலிச் சாமியார் ஆசாரம் பாபு தனது உடல் நிலையை காரணம் காட்டி பிணை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இவரின் இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம் இவருக்கு பிணை மனுவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், “தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டு வரும் இந்த வழக்கை நாம் லேசாக எடுத்துகொள்ள முடியாது” என்றும் “இந்த வழக்கின் சாட்சியங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றும் “அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்” என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இவர் போலி மருத்துவ சான்றிதல் கொடுத்தமைக்காக இவர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம் இவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வித்தித்துள்ளது.

தனது ஆஷரமத்தில் வைத்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காரணத்தால் அசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.

Comments are closed.