அசாராம் பாபு வழக்கு: சாட்சிகளை தாக்கிய இருவர் கைது

0

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அசாராம் பாபு மற்றும் அவர் மகன் நாராயண் சாய் ஆகியோர் வழக்கில் சாட்சிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவியை பெங்களூர் காவல்துறையினர் செப்டம்பர் 21 அன்று கைது செய்தனர். பின்னர் அவ்விருவரும் காந்திநகர் கொண்டுவரப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள வசவராஜ் மற்றும் அவர் மனைவி சிஜல் மகேஷ் பிரஜாபதி ஆகியோர் டாமனை சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை கடந்த ஆறு மாதங்களாக அவர்களை கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அசாராம் பாபு மற்றும் அவர் மகன் வழக்கில் சாட்சிகளாக இருந்த ஒன்பது நபர்கள் இதுவரை தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சூரத்தை சேர்ந்த தினேஷ் பக்சந்தானி, அகமதாபாத்தை சேர்ந்த ராஜூ சந்தக் மற்றும் லாலோ தாக்கூர் மற்றும் ராஜ்கோட்டில் தாக்கப்பட்ட அம்ருத் பிரஜாபதி ஆகியோர் தாக்கப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்களில் அம்ருத் பிரஜாபதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல்களுக்கான செலவுகளை வசவராஜ் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
வௌ;வேறு கற்பழிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட அசாராம் பாபு மற்றும் அவர் மகன் நாராயண் சாய் ஆகியோர் 2013 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் இவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

Comments are closed.