“அச்சமற்ற வாழ்வே, கண்ணியமான வாழ்வு”

0

“அச்சமற்ற வாழ்வே, கண்ணியமான வாழ்வு” என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களாக நாடு முழுவதும் தேசிய பிரச்சாரங்களை நடத்தி வருகின்றது. இப்பிரச்சாரத்தில் போஸ்டர், நோட்டீஸ், தெருமுனை கூட்டங்கள், கருத்தரங்குகள், பெரிய மற்றும் சிறிய அளவிலான பொதுக்கூட்டங்கள், சமூக, அரசியல் தலைவர்கள் சந்திப்பு, மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்று கூடல் என்று நாடு முழுவதும் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

இப்பணியை பாப்புலர் ஃப்ரண்ட், தான் செய்ய வேண்டிய கடமையாக கருதுகின்றது. ஏனென்றால் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் நாட்டை நேசிக்கும் எவரையும் கவலை கொள்ளச் செய்கின்றது.

நாம் நேசிக்கின்ற நமது நாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தனித்தன்மையாகவும், பலமாகவும் கொண்ட நாடு. ஒப்பீட்டளவில் சிறந்த சட்டதிட்டங்களை கொண்ட நாடு. உலகில் வேகமாக முன்னேறிக்  கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று. ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ்., பாஜக சங்பரிவார்களின் கொடுங்கரங்களில் சிக்கி இருண்ட இருளை நோக்கி நமது நாடு இழுத்துச் செல்லப்படுகின்றது. நமது நாடு என்பது நமது மண், நமது இரத்தம், நமது சதை, நமது உணர்வு, நம் அனைவருக்குமான தேசம். எனவே நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று நாம் அமைதியாக கடந்து செல்ல முடியாது. நாட்டை நேசிக்கின்ற ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் குழந்தைகளுக்கும் கூட இன்றைய நிலையில் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது.

நம் நாட்டில் நடப்பதை ஒவ்வொன்றாக பாருங்கள், நம்முடைய கடமையும், பொறுப்பும் நமக்கு புரியும்.

கும்பல் படுகொலை

மனித நாகரிகம் வளர்ச்சியடைந்து, விஞ்ஞானம் முன்னேற்றமடைந்து சந்திரனில் மனிதன் வாழ வழியிருக்கின்றதா என்று சந்திராயனை அனுப்பி சோதித்து கொண்டிருக்கும் வேளையில், சங்பரிவார பாசிஸ்டுகள் பூமியிலேயே மனிதன் வாழ முடியாத நிலையை, தங்களுடைய காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகளின் மூலமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழலில் ஒரு மனிதனை கொல்வதற்கு எந்தக் காரணமும், நியாயமும் தேவையில்லை. சில அடையாளங்கள் மட்டுமே போதும்.  ஒரு தொப்பி அல்லது ஜிப்பா அல்லது தாடி அல்லது முஸ்லிம் பெயர் இவையிருந்தால் அந்த மனிதனை கொல்லலாம் என்ற நிலை நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. இது ஒன்று, இரண்டு நிகழ்வுகள் அல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 266 தாக்குதல்கள் நடந்திருக்கின்றது. இதில் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சிலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். பலர் காயத்தோடும் அவமானத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் மேலும் கொடுமை என்னவென்றால் இந்த படுகொலையை செய்பவர்கள் மீது வழக்குகள் கூட உருப்படியாக போடப்படுபதில்லை. வழக்குகள் போடப்பட்டாலும் சாட்சிகள் மிரட்டி விரட்டப்படுகிறார்கள். குற்றவாளிகள் மாலை அணிவித்து கொளரவிக்கப்படுகிறார்கள். காவல்துறையினர், ஆளும் வர்க்கம் அனைத்தும் இந்த கொலைகாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் அவல நிலையும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலைமையை உணர்த்தி உச்ச நீதிமன்றமே இவ்விசயத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும், கும்பல் படுகொலைகளை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிற்கு 2018லேயே உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவு என்றால் உடனே நாங்கள் நிறைவேற்றுவோம் என்று முத்தலாக் சட்டத்தில் மார் தட்டும் பாஜக அரசு, இந்த உத்தரவை கண்டு கொள்ளவே இல்லை.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது. இந்த கும்பல் படுகொலைகள் எதேச்சையாக நடைபெறுவது அல்ல. மாறாக இந்துத்துவ  பாசிஸ சங்கபரிவார கும்பல்களால் வெறியூட்டப்பட்ட கொலைகார கும்பல்களால் நடத்தப்படுகின்றது. எதேச்சையாக நடைபெறுவதென்றால் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எங்கிருந்து வருகின்றது? கொலை செய்வதை ஏன் வீடியோ எடுத்து பரப்புகிறார்கள்? கொலையாளி ஏன் ஹீரோவாக்கப்படுகின்றான்? இதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். பாசிச பரிவாரத்தின் நுட்பமான செயல்திட்டம் உள்ளது.

இந்தியாவை இந்துத்துவ ராஜ்யமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். துடிக்கிறது. அதற்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும். அதற்கு பாசிச நச்சு மூளையில் உருவான திட்டம்தான் பசு பாதுகாப்பு. இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவையே இந்துக்கள், முஸ்லிம்களை பிரிக்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். எனவே இந்துக்கள் அதிமாக வாழும் பகுதிகளில் பசுவிற்கு ஆபத்து, இந்த முஸ்லிம்தான் காரணம் என்று வதந்தியை பரப்பி கொலைகளை நடத்துகிறார்கள். பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குழந்தையை திருடவந்துவிட்டார்கள் இந்த முஸ்லிம்கள் என்று அங்கும் கும்பலாக படுகொலை நடத்துகின்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய பிரதிநிதி சபாவின் அறிக்கையின்  படி பசுசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை நடத்துகின்றது. 2018ல் மட்டும் 232 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 5,849 கார்யகர்த்தாக்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 2019ல் 43 மாநிலங்களில் (ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்புமுறை) 61 இடங்களில் நடைபெற்ற பயிற்சி முகாம்களில் 2,179 கார்யகர்த்தாக்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் பொதுமக்களுக்காக நடத்தப்பட்ட 305 பயிற்சி முகாம்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் இந்த முகாம்களில் என்ன பயிற்சி கொடுக்கின்றார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம். எது எப்படியாக இருந்தாலும் இதன் பலனை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக எந்தவித மனிதத்தன்மையும் இல்லாமல் பாசிச இந்துத்துவ கொலைகார கும்பல்களால் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை ஏராளமாகவும், தாராளமாகவும் நடத்துகின்றது. இந்துத்துவ கொலைகார கும்பல் வதந்தியை பரப்பி முஸ்லிம்களை அடித்தே கொல்கிறது. இந்நிலையில் நாம் என்ன செய்யப் போகின்றோம்?

ஒரு நாட்டின் அரசியல் சாசனம் என்பது அந்நாட்டின் குடிமக்களோடு அந்த நாடு ஏற்படுத்திக் கொண்ட  ஒப்பந்தமாகும். அரசியல் சாசனம் மீறப்படுகிறதென்றால் குடிமக்களுடனான ஒப்பந்தம் மீறப்படுகின்றது என்று பொருள். அரசியல் சாசனப்படி குடிமக்களின் உயிரையும், சொத்துக்களையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு அரசிற்கு உள்ளது. இந்த பொறுப்பு முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றால் மக்கள் களமிறங்கி ‘அச்சமின்றி வாழ்வோம், கண்ணியத்துடன் வாழ்வோம்’ என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஜனநாயகத்தில் மக்களால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். மக்கள் சமூக பாதுகாப்பை கையிலெடுக்க வேண்டும். இது நமது சமூக கடமையாகும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (ழிஸிசி)

இந்திய அரசமைப்பு சட்டம் மற்றும் நில உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் பிறந்தவர்கள், குடியிருப்பவர்கள், நாட்டின் குடிமக்களாகவே கருதப்படுவர். அதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், வேலை செய்யலாம், வாழ்கையை அமைத்துக் கொள்ளலாம் என அரசியலமைப்புச் சட்டம் குடிமகனுக்கு உரிமை வழங்கியுளளது. ஆனால் அஸ்ஸாமில்  40 இலட்சத்து 7 ஆயிரம் சொந்த நாட்டு மக்களையே சந்தேகத்தின் நிழலில் நிறுத்தி, இந்தியர்களே இல்லை என்று ழிஸிசி பதிவேடு வெளியில் நிறுத்தியிருக்கிறது. இது அஸ்ஸாம் மக்கள் தொகையில் 12சதவீதமாகும். இப்பொழுது கூடுதலாக ஒன்றரை இலட்சம் பேரையும் சரிபார்க்கிறோம் என்ற பெயரில் இந்தியர்கள் இல்லை என்று அறிவித்து இருக்கிறார்கள். பெங்காலி பேசும் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் இப்பட்டியலில் அடக்கம். ஆனால் ஆர்.எஸ். எஸ்., பாஜக வின் குறி முஸ்லிம்களை மட்டுமே நோக்கி நிற்கின்றது.

ழிஸிசி வெளியிட்டுள்ள பட்டியலில் அஸ்ஸாமின் முன்னாள் முதலமைச்சர் அன்வாரா தைமூர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அகமது ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோரின் பெயர்கள் இல்லை. இதை வைத்தே இந்த பட்டியலின் இலட்சனத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.

பாஜக மற்றும் இனவெறி பிடித்த ஆளும் வர்க்கத்தின் இரண்டு நோக்கம் இதன் பின்னணியில் இருக்கின்றது. ஒன்று, மக்கள் தொகை அடிப்படையில் கஷ்மீருக்கு அடுத்தப்படியாக அஸ்ஸாம்தான் அதிக முஸ்லிம் மக்கள் தொகை சதவீதத்தை கொண்ட மாநிலம் (1.07 கோடி,- 34.22%) இதை ஒழித்துக் கட்ட வேண்டும். மேலும் எஞ்சியிருக்கும் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவில் ரோஹிங்கியா போன்று முகாம்களை உருவாக்கி நிரந்தரமாக இந்து முஸ்லிம் பிரச்சனைக்கு வித்திடுவது. இதன் மூலம் நிரந்தரமாக அரசியல் இலாபம் அடைவது.

உண்மை என்னவென்றால் 1985ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அஸ்ஸாம் மக்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 1971 மார்ச் 24 அன்று யாரெல்லாம் அஸ்ஸாமில் இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் இந்திய குடிமக்கள் என அங்கீகரிப்பது என்பதாகும். இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நியாயமான அடிப்படையில் ழிஸிசி நடந்தால் ஒரு முஸ்லிமும் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை. ஆனால் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் ழிஸிசியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி முஸ்லிம்களை வேட்டையாட தீர்மானித்து செயல்படுகிறார்கள்.

ழிஸிசி பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களைக்காட்டி சரி செய்து கொள்ள ஆகஸ்ட் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை சரிபார்க்கும் நடைமுறைகளை பார்த்தால் கண்களில் கண்ணீரல்ல, இரத்தம் வரும்.

முதலில் அஸ்ஸாமை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அஸ்ஸாமில் ஏழைமக்கள் குடிசைகளிலும், சிறிய வீடுகளிலும் வசிக்கின்றார்கள். வருடத்திற்கு ஒருமுறை கட்டாயமாக வெள்ளப் பேரழிவு ஏற்படுகின்றது. வெள்ளப் பேரழிவு எப்படி ஏற்படும், எங்கே ஏற்படும் என்று கணிக்க முடியாத நிலை. வெள்ளப் பேரழிவு ஏற்பட்டால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒட்டுத் துணியோடு நடுரோட்டில் நிற்கும் மக்கள். எப்படி ஆவணத்தை பாதுகாப்பார்கள்?

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஆவணங்களை முழுவதுமாக காட்டினாலும், முஸ்லிம்களுடைய பெயரை எழுதத் தெரியாததனால் அதில் ஒரு எழுத்து விடுபட்டிருக்கிறது. இதில் ஒரு எழுத்து மாறியிருக்கின்றது என்று துவேச உணர்வுடன் நிராகரிக்கப்படுகின்றது. பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபம். பிறந்த வீடு, புகுந்த வீடு என்று ஏற்படும் இடம் மாற்றம், ஆவணங்களை சரி செய்து தருவதில் அரசு ஏற்படுத்தும் தாமதம் என்று சொல்லில் வடிக்க முடியாத அலைக்கழிப்பு. முஸ்லிம்கள் எல்லா ஆவணங்கள் கொடுத்தபின்பும் ஸிமீழீமீநீtமீபீ என்று வருகின்றது. ஏன் என்று காரணம் கேட்டால் ழிஷீ க்ஷீமீணீsஷீஸீ என்று விளக்கம் கொடுக்கிறார்கள் அதிகாரிகள்.

பெயர் நீக்கம் சரிபார்ப்பு நடைமுறை எந்த அளவிற்கு கொடுமை என்றால், ஒரு ழிஸிசி படிவத்தை நிரப்புவதற்கு மட்டும் குறைந்தது 24 மணி நேரமாவது செலவிட வேண்டும். அந்த அளவிற்கு சிக்கல் நிறைந்ததாக படிவம் இருக்கின்றது. மேலும் சரிபார்ப்பிற்கு 200லிருந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து செல்ல வேண்டும். அதுவும் அதிகாரிகள் அழைக்கும் நேரத்தில் செல்ல வேண்டும். அந்த அழைப்பு ஒரு நாள் முன்பாக அல்லது இரண்டு நாள்கள் முன்பாகத்தான் வரும்.

அதிகாரிகள் அழைக்கும் நேரத்தில் அவர் முன்பாக ஆஜராக வேண்டியது விண்ணப்பிப்பவர் மட்டுமல்ல. ஒருவர் விண்ணப்பித்தால் அவருடைய குடும்ப  மரபு முழுவதும் அவர்கள் எங்கிருந்தாலும் அந்த அதிகாரியின் முன்பு ஆஜராக வேண்டும். குடும்ப மரபில் உள்ளவர் மும்பையிலோ, டெல்லியிலோ வேலை பார்த்தாலும் அடித்து பிடித்து ஓடி வர வேண்டும். ஒரு விண்ணப்பத்திற்காக மொத்த குடும்ப மரபும் பேருந்தோ, வேனோ பிடித்து அதிகாரியின் முன்பாக ஆஜராக வேண்டும். ஒருவடைய பெயரை சரிபார்ப்பதற்கு மட்டும் ரூ. 40,000 முதல் 50,000 வரை செலவழிக்க வேண்டியதும் வருகின்றது. வெளியூரில் இருப்பவர்களுக்கு இவர்கள் திடீரென அழைப்பதால் விமானத்தில் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையும் இருக்கின்றது. ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? இதில் மேலும் கொடுமை என்னவென்றால் அந்த அதிகாரிக்கு தெளிவு ஏற்படவில்லை என்றால், எத்தனை தடவை அழைத்தாலும் இதேபோன்று அவர் முன்பாக ஆஜராக வேண்டும்.

எவ்வளவு கொடுமை! சொந்த நாட்டின் மக்களின் மீது அவர்களுடைய இருப்பு, உயிர், உணர்வு, கண்ணியத்தின் மீது, பேப்பரையும், பேனாவையும் கெட்ட உள்நோக்கத்தையும் வைத்துக் கொண்டு இவர்கள் விளையாடும் விளையாட்டு! எப்படியாவது பல இலட்சம் முஸ்லிம்களை இந்தியக் குடியுரிமையை விட்டு வெளியே தள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.யும் ஆளும் வர்க்கமும் எல்லா நடைமுறைகளையும் துர்உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் வேறு இந்தியா முழுவதும் இந்த ழிஸிசி யை கொண்டு வருவோம் என்று பாஜக அலறிக் கொண்டிருக்கிறது. அடுத்த திட்டம் மேற்குவங்கம்தான் என்றும் கூறுகிறார்கள். அதனால்தான் திருணாமூல் காங்கிரஸ் எம்.பி. மொகுயா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் “பாஜகவின் சொந்த அமைச்சரே என்ன படித்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லாத பாஜக, 50 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் இருக்கும் மக்களிடம் ஆவணத்தை கேட்பது என்ன நியாயம்? நீங்கள் யார்? உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?” என்று கேட்டார்.

பெங்காலி பேசும் அஸ்ஸாம் மக்கள் மீது நடத்தப்படும் மனிதத்தன்மையற்ற இந்த கொடுமைக்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம்? அது நம்மையும் வந்து தாக்க இருக்கிறதே! அதற்கு வருமுன் காக்கும் விதமாக என்ன செய்யப் போகிறோம்? நாம் சிந்திக்க வேண்டாமா?

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 1955, சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த அனைவருக்கும் குடியுரிமையை மறுக்கிறது. இது ஜாதி, மதம், இனம் உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் கடந்து அனைவருக்கும் பொதுவானது. ஆனால் பாஜக இப்பொழுது கொண்டு வரத் துடிக்கின்ற குடியுரிமை சட்டத்திருத்தம், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமையை மறுக்கிறது. மற்ற அனைத்து மதத்தினருக்கும் குடியுரிமையை வழங்கலாம் என்கின்றது. அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு யாரேனும் புலம்பெயர்ந்திருந்தால் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது. மற்ற யாராக இருந்தாலும் இந்தியாவில் ஆறுவருடம் வசித்திருந்தால் மாவட்ட நீதிபதியிடமே குடியுரிமையை பெற்றுக் கொள்ளலாம் என்கின்றது பாஜக கொண்டு வரத் துடிக்கின்ற குடியுரிமை சட்டத்திருத்த மசோதா.

அதாவது அஸ்ஸாமில் ழிஸிசி என்ற பெயரில் எத்தனை இலட்சம் இந்துக்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாலும் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் மூலமாக உடனே குடியுரிமை வழங்கப்படும். ஆனால் முஸ்லிம்களாக இருந்தால் மட்டும் குறிவைக்கப்பட்டு ரோஹிங்கியா போன்று முகாம்கள் உருவாக்கி வெளியேற்றுவதுதான் திட்டம்.

இந்திய அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. ஆனால் இம்மசோதா மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் நெறிமுறைகளின்படி, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியாது. ஆனால் இந்திய எல்லைகளையும் தாண்டி இந்துக்களின் பாதுகாவலனாக தங்களைக் காட்டிக் கொள்வதே ஆர்.எஸ்.எஸ்.ன் நோக்கம்.

முஸ்லிம்களை மட்டும் ஒதுக்கி நிறுத்துவதில் ஆர்.எஸ்.எஸ்.  பரிவாரங்களுக்கு இரண்டு திட்டம் உள்ளது. ஒன்று, எல்லையோர மாநிலங்களில் வாழும் எந்த முஸ்லிமையும் வெளிநாட்டிலிருந்து வந்தவன் என்று சந்தேகத்தின் நிழலில் நிறுத்தி வேட்டையாடுவது. இரண்டாவது முஸ்லிம்களை பெரிய பூச்சாண்டியாக நாட்டிற்கும் மக்களுக்கும் காட்டுவது.

மொத்தத்தில் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய அரசியல் சாசனத்தை அழித்து இந்தியாவை அவர்கள் விரும்பும் இந்துத்துவ ராஜ்ஜியமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஒன்று. ‘கர்வாப்பஸி’ என்று அவர்கள் கூப்பாடு போடுவது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் இது பாஜகவின் கர்வாப்பஸி சட்டம்.

உலகிலேயே இனவெறி கொண்ட ஒரு தேசமாக இஸ்ரேல் இருக்கின்றது. பல்வேறு மாண்புகள் நிறைந்த நமது நாட்டையும், மத வெறி கொண்ட நாடாக ஆர்.எஸ்.எஸ்.ன் சுயநலனுக்காக தாழ்த்தும் ஏற்பாடே இது.வடகிழக்கு மாநிலங்களிலுள்ள மக்கள், குறிப்பாக இந்து மக்களும் இந்த சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் போராட வேண்டும். ஏனென்றால் இந்த தேசம் நம் அனைவருக்குமானது. ஆர்.எஸ்.எஸ்.ற்கு மட்டும் சொந்தம் அல்ல.

முத்தலாக்

முத்தலாக் நாட்டின் பெரும்பிரச்சனையாக இந்துத்துவ பரிவாரங்களால் விவாதிக்கப்பட்டது. இப்பொழுது பெரும்பான்மை பலத்தைக் கொண்டு சட்டமும் இயற்றப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களின் விசயத்தில் சட்டம் இயற்றும் பொழுது முஸ்லிம்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முத்தலாக் ஒரு பிரச்சனையே இல்லை. மேலும் முத்தலாக் விசயத்தில் முஸ்லிம் தனியார் சட்டவாரியமே பல்வேறு  ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்து, விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டது. அது மட்டுமல்லாமல் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் மணமுறிவு குறைவாக கொண்ட சமுதாயம், முஸ்லிம் சமுதாயம். உண்மைகள் இப்படி இருக்கும்போது, முத்தலாக் ஏன் தேசத்தில் பெரும் பிரச்சனையாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பரிவாரங்களால் உருவாக்கப்பட்டது? முஸ்லிம் தனியார் சட்டத்தை பின்வாசல் வழியாக ஒழித்துக் கட்ட வேண்டும். உண்மைக்கு மாறாக முஸ்லிம்களை நாட்டின் வில்லன்களாக சித்தரிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இவர்கள் சபரிமலை விவாகாரத்தில், மத விசயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று எடுத்த நிலைபாடும், கேரளத்தையே கலவர மயமாக்க முயற்சித்த நிலைபாட்டையும் பார்த்தால் எளிதில் இவர்களின் இரட்டை நிலையை புரிந்து கொள்ளலாம். முத்தலாக் விசயத்தில் இவர்கள் கொண்டு வந்திருக்கும் தீர்வு என்ன? முஸ்லிம் ஆண்களை சிறையில் தள்ளுவது, அதன் மூலம் முஸ்லிம் பெண்களை நிரந்தரமாக தண்டிப்பது. இதில் நீதி எங்கேயிருக்கிறது?

பாபரி மஸ்ஜித்

பாபரி மஸ்ஜித்தை இடித்து, அப்பிரச்சனையை எப்பொழுதும் நீறுபூத்த நெருப்பாக வைத்து, முஸ்லிம்களை வேட்டையாடவும், இந்துக்களிடையே மதவெறியை தூண்டி அரசியல் இலாபம் அடையவும் பயன்படுத்துகிறார்கள். பட்டப்பகலில் பாபரி மஸ்ஜித்தை இடித்தவர்களுக்கு என்ன தண்டனை? அது எப்போது வழங்கப்படும்? லிபர்ஹான் கமிஷன் குற்றவாளிகளை பட்டியலிட்டு வழங்கிய பின்பும் ஏன் நீதி மறுக்கப்படுகின்றது? இம்மாபெரும் ஜனநாயக நாட்டில் கால் நூற்றாண்டு கடந்த பின்பும் இதற்கு பதிலில்லை. ஆனால் நேரெதிராக முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் நிலத்தை விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்று வெளிப்படையாகவே மிரட்டப்படுகின்றார்கள்.  நீதி எங்கே இருக்கிறது?

ஜனநாயகப் படுகொலை

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் இன்று ஜனநாயகத்தின் மீதே பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தப்படுகின்றது. அதில் சமீபத்திய நடவடிக்கைகள் தான் ழிமிகி வுக்கு வானளாவிய அதிகாரம். இதன் மூலம் ழிமிகி  மாநில அனுமதியின்றியே யார் மீதும் வழக்கு போடலாம், யாரையும் கைது செய்யலாம். சமூக வலைதளங்களில்  இடப்படும் கருத்துக்களைக் கூட கண்காணிக்கலாம், நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரம்  கொட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றது. ழிமிகி  இதுவரை எப்படி செயல்பட்டு வந்துள்ளது என்பதைப் பார்க்கும் யாரும் இது எந்தளவிற்கு ஆபத்தானது என்பதை உணர முடியும்.

ழிமிகி இதுவரை ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர் களையெல்லாம் நற்சான்றிதழ் கொடுத்து விடுவித்திருக்கிறது. அரசு வழக்கறிஞர் ரோஹினி சாலியான் தனக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை வெளிப்படையாகவே மக்களுக்கு அறிவித்தார். மறுபுறம் முஸ்லிம்களை வேட்டையாடுவதையும் பார்க்க முடிகின்றது. எனவே ழிமிகி விற்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். ராஜ்ஜியத்திற்கு எதிரானவர்களை, எதிர்க்கருத்துடையவர்களைக் கூட சுதந்திரமாக வேட்டையாடுவதற்கான ஏற்பாடாகவே முடியும் ஆபத்து வெளிப்படையாகவே தெரிகின்றது.

ழிமிகி தவறாக பயன்படுத்தப்படாது என்று அமித்ஷா கொடுத்த உறுதியின் பேரில் நாங்கள் ழிமிகி சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று சொல்லும் திமுக, காங்கிரஸ், அதிமுக உட்பட மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டன. இதன் பலனை அவர்களும் அனுபவிப்பார்கள். இதில் உறுதியாக நின்று எதிராக வாக்களித்து தனது கடமையை செவ்வனே செய்த சிறிவி, சிறிமி, கிமிவிவி, ழிசி கட்சிகளை நாம் பாராட்ட வேண்டும்.

ஹிகிறிகி வின் மீதான சட்டதிருத்தம் அதிபயங்கரமானது. எந்த தனிமனிதனையும் ஆளும் வர்க்கங்களே, தீவிரவாதி என்று முடிவு செய்வதற்கு வழிவகை செய்து கொடுக்கும் அபாயம் இதன் அம்சத்தில் இருக்கின்றது. எனவே அரசை தட்டிக் கேட்பவர்களை, அரசிற்கு எதிராகப் போராடுவர்களை, எதிர்கருத்துடையவர்களை, ஏன் எதிர்க்கட்சிகளை கூட தேசத்திற்கு எதிரானவர்கள், தேச விரோதிகள் என்று கதை கட்டுவதற்கும் பழிவாங்குவதற்கும் வாய்ப்பிருக்கின்றது. இதுவரை ஹிகிறிகி எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை பார்த்தாலே வேதனை மிகுகின்றது. ஆம் ஐந்து வருடங்கள், 10 வருடங்கள், 14 வருடங்கள், 23 வருடங்கள் கூட சிறைச்சாலையில் அநியாயமாக தண்டிக்கப்பட்டு, பின் நீதிமன்றத்தால் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்ட கண்ணீர் கதைகள் நமது நாட்டில் ஏராளம். இப்படிப்பட்ட ஹிகிறிகி விற்குத்தான் இப்பொழுது இன்னும் அதிகாரம் கூட்டப்பட்டிருக்கின்றது. தடா, பொடாவை விட இது அதி பயங்கரமான சட்டம். எனவே தடா, பொடாவை எப்படி எதிர்த்துப் போரடினோமோ, அதைவிட கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் நம்முன் இருக்கின்றது.

ஸிஜிமியில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் வெளிப்படையான நிர்வாகம் என்பதை மீண்டும் இருண்ட அறைகளுக்குள் பூட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஸிஜிமியினுடைய சுதந்திரத்தன்மையை முறித்து மக்களுக்கு ஜனநாயத்தில் இருக்கும் அதிகாரத்தைப் பறித்து ஆளும் அரசின்  கைப்பாவையாக இந்த மாற்றத்தின் மூலமாக ஸிஜிமி கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

கஷ்மீரில் 370, 35கி நீக்கமும், கஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியிருப்பதும், முற்றிலும் ஜனநாயகத்தை மீறுவதாகவும், சட்டத்தை மீறுவதாகவும் இருக்கின்றது. ஒரு மாநிலம் சார்ந்த தீர்மானம் எடுப்பதில், அம்மாநில மக்களுக்கு, அம்மாநிலத்தின் பிரதிநிதிகளுக்கு, அம்மாநிலத்தின் அமைப்பு முறைக்கு எந்த பங்கும் இல்லை, எவரையும் கேட்கவேண்டியதில்லை என்ற மத்திய அரசின் போக்கு, முற்றிலும் அக்கிரமமானது. கஷ்மீரத்து மக்கள், நம் தேசத்தை நம்பி வந்தவர்கள். அவர்களை இந்த முறையில இழிவாக நடத்துவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? எனவே நமது தேசத்தின் ஜனநாயகத்தன்மையை கட்டிக்காப்பதற்கு நாம் முன்வர வேண்டாமா?

நிர்வாக அமைப்பு மாற்றம்

இந்தியாவினுடைய நிர்வாக அமைப்பையே அவர்களுக்கு தோதுவான வகையில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா என்றாலே, அதனுடைய தனித்தன்மை, அதனுடைய வலிமை என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். பல வண்ண மலர்களைக் கொண்ட பூங்காதான் இந்தியா. அதில் எல்லா மலர்களுக்கும் ஒரே நிறம் அடிக்கும், இயல்புக்கு எதிரான முயற்சியைத்தான் பாசிசவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரே நாடு –  ஒரே கலாச்சாரம், ஒரே நாடு – ஒரே வரி, ஒரே நாடு – ஒரே சந்தை, ஒரே நாடு – ஒரே தேர்வு, ஒரே நாடு – ஒரே தேர்தல், ஒரே நாடு – ஒரே மொழி இப்பொழுது ஒரே நாடு – ஒரே குடும்ப அட்டை என்பது வரை  திட்டம் விரிவடைந்து கொண்டே இருக்கின்றது. இந்த முயற்சிகள் எல்லாம் நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிட்டு சர்வாதிகாரத்தை கொண்டு வரும் முயற்சியாக மாற வாய்ப்பிருக்கின்றது.

இந்துத்துவ கலாச்சாரம் அல்லாத வேறு எந்த கலாச்சாரத்திற்கும் இங்கு இடமில்லை. அங்கீகாரமில்லை என்பதும், சமஸ்கிருதத்தை, இந்தி மொழியை தவிர வேறு எந்த மொழிக்கும் வாழ்வு இல்லை, அவை இரண்டாம் தரம்தான் என்பதும், நீ எந்த பின்தங்கிய கிராமபுறத்தில் இருந்து வந்ததாலும் எந்த வாய்ப்பும் உனக்கு இல்லையென்றாலும் நீ இந்த தேர்வு எழுதினால்தான் மருத்துவராக முடியும் என்பதும், ஒரே தேர்தல் என்பதன் மூலம் மக்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஆளும் கட்சியே ஆட்சியாளர்களை நியமிக்கும் ஏற்பாட்டை திட்டமிடுவதும், இவையெல்லாம் கூட்டாட்சி தத்துவத்தை, ஜனநாயகத்தை, பன்முகத்தன்மையை, குழிதோண்டிப் புதைக்கக்கூடிய செயல்களாகும். தமிழக மக்களாகிய நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தமிழக மக்கள்தான் உரிமைப் போராட்டத்தில், இந்தியாவிற்கே வழிகாட்ட முடியும். தலைமையேற்க முடியும். இதற்கு தேவையான தெளிவும், அறிவும், வீரமும் தமிழனுக்கு உண்டு. தமிழ் மண்ணுக்கு உண்டு என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கின்றது. எனவே தமிழ் மக்கள் பாசிசத்திற்கெதிராக உரிமைப் போரை நடத்த முன்வர வேண்டிய காலம் இது. பாசிச பாஜகவுக்கு எதிராக ஓட்டுப்போட்டவுடன் மட்டும் நமது கடமை முடிவடைந்துவிடுவதில்லை. பாசிச பாஜகவுக்கு எதிராக, அதனுடைய தத்துவங்களுக்கெதிராக களம் காண முன்வர வேண்டும்.

பாசிசத்தின் குறிவைப்பு

ஆர்.எஸ்.எஸ்.ம் அதனுடைய பாசிச பரிவாரங்களும் தன்னை எதிர்ப்பவர்களை, தன்னுடைய சித்தாந்தங்களை எதிர்ப்பவர்களை குறிவைக்கின்றார்கள். பல்வேறு தொடர் நெருக்கடிகளின் இறுதியாக கொலையும் கூட செய்வார்கள் என்பதுதான் நாம் கண்டு கொண்டிருப்பது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ், ரோஹித் வெமுலா இவர்களெல்லாம் ஈவிரக்கமில்லாமல் பாசிசவாதிகள் நடத்திய இரத்த வேட்டைக்கு பலியானவர்கள். இது தவிர குறிவைக்கப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் இவையெல்லாம் பட்டியலிடுவது கூட சிரமம். சிஙிமி, ணிஞி, மிஜி, ழிமிகி போன்ற அமைப்புகளெல்லாம் இந்த குறிவைப்பு முயற்சிக்கு கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

குறிவைப்பு முயற்சியின் சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம்தான் குஜராத்தின் சஞ்சீவ் பட் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆயுள் தண்டனை கைதியாக ஆக்கப்பட்டிருப்பது. சஞ்சீவ்  பட் தன்னுடைய மனசாட்சிக்கு பயந்து மோடிக்கெதிராக உண்மையை சொன்னார். இதுதான் அவர் செய்த மாபெரும் குற்றம். அதாவது குஜராத் கலவரத்தின் போது  போலிஸ் அதிகாரிகளுடைய கூட்டத்தில் மோடி, ‘இந்துக்கள் தங்களுடைய ரோசத்தை வெளிப்படுத்தட்டும், நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்’ என்று ராஜதர்மத்தை மீறி கேட்டுக் கொள்கின்றார். இதை தன்னுடைய இரண்டு காதுகளால் நேரடியாகவே கேட்கின்றார் சஞ்சீவ் பட்.

நானாவதி கமிஷன் முன்பு சாட்சி சொல்ல வேண்டிய நேரம் வரும்பொழுது தனது மனைவியிடம் கலந்தாலோசித்து, நான் கமிஷன் முன்பு பொய் சொன்னால் எனக்கு பெரிய கௌரவம் கிடைக்கலாம். ஆனால் என்னால் தினமும் இரவில் தூங்க முடியாது, ஏனென்றால் என்னுடைய மனசாட்சி என்னை தண்டிக்கும். எனவே நான் உண்மையை சொல்லப்போகிறேன் என்று உறுதியாக தீர்மானித்து மோடிக்கு எதிராக உண்மையை சொன்னார். அதனால் சொல்லொனாத் துயரங்களை அவரும், அவருடைய குடும்பமும் சந்தித்து வருகின்றது. என்றாலும் பாசிசத்திற்கெதிரான முன்மாதிரிப் போராளியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இப்பொழுது முன்னாள் நிதி  அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதத்திலும் குறிவைப்பு முயற்சி தெளிவாக தெரிகிறது. சட்டப்படியான நடவடிக்கைகளை யார் மீது எடுப்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தனிப்பட்ட ரீதியில் பழி வாங்குதல் என்பது அதிகார துஷ்பிரயோகம்.

இதே போல்தான் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸம்கான் நடத்தி வந்த, 3500 மாணவர்கள் படித்து கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பூட்டி சீல்வைத்திருக்கிறது யோகி நிர்வாகம். அங்குள்ள பொருள்களையெல்லாம் எடுத்துச் சென்று விட்டதாக ஆஸம்கான் கூறுகின்றார். ஏனென்றால் ஆஸம்கான் உத்தர பிரதேத்தில் பாஜகவுக்கு எதிராக கம்பீரமாக பேசுகின்றார். எனவே அவர் குறிவைக்கப்பட்டிருக்கிறார். இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

நாம் எல்லோரும் இரத்தம் சிந்தி உருவாக்கிய நாட்டை, ஆர்.எஸ்.எஸ். பாசிசம் அபகரிக்க கூடும்போது, நம்முடைய  அரசியலமைப்பு சட்டத்தை ஒழித்துக்கட்டி, மறைமுகமாக மனுதர்மசட்டத்தை கொண்டு வர துடிக்கும் போது, ஜனநாயகமே ஆபத்திலிருக்கின்றது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, இதற்கு முன்பு கேட்காத வகையில் எடுத்துச் சொன்ன பின்பு நம்முடைய மற்றும் நம்முடைய சந்ததிகளுக்கு மான இயற்கை வளங்கள், நிலம், நீர், மண், காற்று, மலை இலையெல்லாம் எந்த மனிதத்துவமும், எந்த அறமும் இல்லாமல் பெருமுதலாளி களின் இலாபவெறிக்கு இரையாக்கப்படும்போது நம்முடைய தாய்மொழியாம் தமிழையே, இரண்டாம் தரமாக ஆக்க முயற்சிக்கும்போது, சொந்த நாட்டு மக்களையே அடித்துக் கொல்லவதற்கு, கொன்று குவிப்பதற்கு, அகதிகளாக்குவதற்கு, ஆட்சியாளர்களே திட்டமிடும்போது நாம் என்ன செய்வது? எதுவும் நடக்காதது போன்று அமைதியாக கடந்து செல்வதா? அல்லது நீதிக்காக உரிமைக்காக நம்முடைய சக்திகளை ஒன்று திரட்டி போராடுவதா? எந்த மானமுள்ள மனிதனும் தேர்ந்தெடுப்பது, எதிர்த்து போராடுவதைத் தான். ஏனென்றால் எல்லா இழப்புகளையும் விட அடிமைத்தனம் கொடுமையானது. எனவே நாம் போராட முன்வர வேண்டும்.

எம். முகம்மது அலி ஜின்னா,

தேசிய பொதுச் செயலாளர்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [/groups_member] … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.