அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு: ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ், பிரக்யா சிங் -ஐ விடுவித்தது NIA

0

2007 அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்று மும்பை தீவிரவாத தடுப்புப் படை கைது செய்த சாத்வி பிரக்யா சிங் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான இந்திரேஷ் குமார் ஆகியோரை தேசிய புலனாய்வுத்துறை குற்றமற்றவர்கள் என்று கூறி இவ்வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

முன்னதாக மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையின் போது குற்றவாளிகளான சாத்வி பிரக்யா சிங் முதலியோருக்கு NIA கேடையமாக செயல்படுகிறது என்றும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மென்மைப்போக்கை கையாளுமாறு NIA தன்னிடம் கூறியதாகவும் வழக்கறிஞர் ரோகினி சாலியன் 2015 ஆம் ஆண்டில் குற்றம் சாட்டியிருந்தார் (பார்க்க செய்தி). இவரது இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் NIA வின் அடுத்தடுத்த செயல்பாடுகள் இருந்தது செய்திகளில் வெளியானது.

பார்க்க செய்திகள்:
நீதிமன்றத்தில் NIA கைவிரித்ததால் பிணையில் விடுதலையானார் பிரக்யா சிங்
மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கை காப்பாற்ற போராடும் NIA?

சாத்வி பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்கினால் அதற்கு ஆட்சேபனை இல்லை: NIA
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியை தேர்தலில் போட்டியிட அனுமதித்த NIA  சிறப்பு நீதிமன்றம்
NIAவின் குற்றப்பத்திரிகையை நிராகரிக்க கோரி மாலேகான் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர் மனு
NIAவின் கூற்றுக்கள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது: கர்கரேவுடன் பணியாற்றிய அதிகாரிகள்
2007 அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் விடுவிப்பு
சிறையில் இருந்து விடுதலையாகிறாரா சாத்வி பிரக்யா சிங்?
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி அசீமானந்தாவிற்கு பிணை!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் உட்பட ஐந்து பேர் விடுவிப்பு
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா சிங் தப்புகிறார்?

தற்போது அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் தங்களது அறிக்கையை சமர்பித்த NIA, சாத்வி பிரக்யா சிக், இந்திரேஷ் குமார், ரமேஷ் வெங்கட்ராவ் மகால்கர் மற்றும் ராஜேந்திரா என்ற சமந்தர் (இவர் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்) ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள இல்லை என்று கூறியுள்ளது.

NIA நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதா இல்லை நிராகரிப்பதா என்பது தொடர்பாக நீதிமன்றம் வருகிற ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி முடிவெடுக்கும் என்று கூறப்படுகுறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே, சுரேஷ் நாயர் மற்றும் ராம் சந்திரா ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். ஜெயந்தி பாய் மற்றும் ரமேஷ் கோஹில் ஆகியோர் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி அஜ்மீர் தர்காவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு இஸ்லாமியர்கள் காரணம் என்று கூரப்பட்டு முஸ்லிம்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான விசாரணையில் இந்த குண்டு வெடிப்பை இந்துத்வா தீவிரவாதிகள் செய்ததாக தெரியவந்தது. இந்த குண்டு வெடிப்பை தான் தான் நிகழ்த்தியதாக சுவாமி அசீமானந்த் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இவரும் பின்னர் NIA வால் இவ்வழக்கில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.