அஜ்மீர்: 7 வயது சிறுமியை வன்புணர்வு செய்த காளிசத் கோவில் பூசாரி

0

அஜ்மீர்: 7 வயது சிறுமியை வன்புணர்வு செய்த காளிசத் கோவில் பூசாரி

அஜ்மீரில் உள்ள காளிசத் கோவிலின் பூசாரி ஒருவரால் ஏழு வயது சிறுமி ஒருவர் கடந்த புதன் கிழமை இரவு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து கோவில் பூசாரியை காவல்துறையினர் POSCO சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள செய்திகளின்படி, அச்சிறுமி கல்யானிபுரா மலைப்பகுதியில் உள்ள காளிசத் ஹனுமான் கோவிலின் அருகே மேய்ந்துகொண்டிருந்த தனது கால்நடைகளை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பலவந் என்ற 48 வயது சுவாமி சிவானந் அச்சிறுமியை ஏமாற்றி கோவிலுக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அங்கு வைத்து அச்சிறுமியை வன்புணர்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுயநினைவை இழந்து மயக்கமுற்ற அச்சிறுமி அங்குள்ள ஒரு காலியான அறையில் மயக்கமுற்ற நிலையில் விடப்பட்டுள்ளார்.

சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து அவளை தேடி வந்த அவரது தந்தை அந்த அறையில் சிறுமி இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து தனக்கு சுயநினைவு வந்ததும் தனக்கு நடந்தவற்றை அச்சிறுமி விவரிக்க காவல்துறையிடம் அது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அஜ்மீர் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர சிங், “கோவில் பூசாரியை நாங்கள் கைது செய்துள்ளோம். அச்சிறுமியை சிகிச்சைக்காகவும் மருத்துவ பரிசோதனைக்ககாவும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட கோவில் பூசாரி மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவர் ஏற்கனவே சர்ச்சைக்குரிய நபர் தான் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Comments are closed.