அடி வாங்கிய பாஜக: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம்

0

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு விரைவில் சட்டம் கொண்டு வரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராம் மாதவ் தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் ராம் மாதவ் பேசியதாவது:

ஒரு நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியும், அரசுகளை மாற்ற முடியும், ஆட்சியை மாற்ற முடியும் என்ற அளவுக்கு சமூக ஊடகங்கள் சக்திவாய்ந்தவையாக வளா்ந்துள்ளன. நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை பலவீனமாக்குவது போன்றவற்றுக்கு சமூக ஊடகங்கள் காரணமாக உள்ளதால் ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இது தொடா்பான புதிய சட்டங்களை இயற்ற பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உரிய சட்டங்கள் இயற்றப்படும்.

பாஜக ஆதரவாளர்கள் பலர், ட்விட்டரில், பெண்களை, தரக்குறைவாக பாலியல் ரீதியாக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது குறித்து நீண்டகாலமாக கண்டுகொள்ளாமல் இருந்த ட்விட்டர் நிறுவனம், இது போல பெண்களை பாலியல் ரீதியாக விமர்சனம் செய்யும் ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை சமீபத்தில் ரத்து செய்தது. இது பாஜக கடுமையாக எரிச்சல் அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply