அதிகாரிகளால் தகர்கப்பட இருந்த பள்ளிவாசலை காப்பாற்றிய இந்துக்கள்

0

மகாராஷ்டிர மாநிலம் கல்யான் பகுதிக்கு அருகில் உள்ள கோனா கிராமத்தில் உள்ள பள்ளிவாசலை கடந்த செவ்வாய் கிழமை மும்பை பெருநகர வட்டார மேம்பாட்டு ஆணையம் இடிக்க முற்பட்டுள்ளது.  ஆனால் அப்பகுதி இந்துக்கள் அவர்களை தடுத்தி நிருத்தியுள்ளனர். மேலும் அந்த பள்ளிவாசல் தகர்க்கப் படுமாயின் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கும் அதே நிலை தான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 7  ஆம் தேதி பள்ளிவாசலை இடிக்கப் போவதாக MMRD நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து சுமார் 500 காவலர்களுடன் அப்பகுதிக்கு வந்த MMRD அதிகாரிகள் இரண்டு ஜேசிபி மற்றும் ஒரு பொகலேன் இயந்திரங்களை வைத்து பள்ளிவாசலை இடிக்க முற்பட்டுள்ளனர்.

இந்து குறித்த தகவலை அறிந்ததும் அந்த கிராமத் தலைவர் உட்பட அப்பகுதி மக்கள் அனைவரும் ஜாதி மத பேதமில்லாமல் பள்ளிவாசலுக்கு விரைந்துள்ளனர். இன்னும் அப்பகுதி இந்துக்கள், அந்த பள்ளிவாசலின் ஒரு செங்கலை அதிகாரிகள் எடுத்தால் கூட அப்பகுதியில் உள்ள கோவில்களை தாங்களே இடித்துவிடுவோம் என்றும அதன் முழுப் பொறுப்பும் அந்த அதிகாரிகளையே சாரும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும் அந்த பள்ளிவாசல் விவாசய நிலமல்லாத இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்றும் அதற்கு கிராம பஞ்சாயத் அனுமதியளித்துள்ளது என்றும் கூறியுள்ளனர். மக்களின் இந்த நல்லிணக்கத்தை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் வேறு வழியின்றி திரும்பிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்து சமுதாய மக்களின் இந்த செயலுக்கு முஸ்லிம் சமூகத்தினர் நன்றி செலுத்தினர்.

Comments are closed.