அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

0

அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

முஸ்லிம் வணிகர்களிடம் கொள்ளையும் – பறிமுதலும்

காம்பே சென்றார் நஸ்ரத்கான். அது முஸ்லிம் வணிகர்கள் வாழும் பகுதி. அவர்களிடமிருந்து விலைமதிக்க இயலாத பொன்னும் நவரத்தினங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையிடப்பட்டன. அங்குதான் அடிமை மாலிக்காபூர் கைப்பற்றப்பட்டார். ஆயிரம் தினார்களுக்கு அவர் வாங்கப்பட்டிருந்தால் ‘ஹஜார் தினார்’ என்றும் அழைக்கப்பட்டார்.

குஜராத் படையெடுப்பு முடிந்து திரும்பும் வழியில் சாதி, மத வித்தியாசமின்றி காம்பேயில் முஸ்லிம் பெருவணிகர்களின் பொன்னும், மணியும், பெரும் சொத்துக்களும் நஸ்ரத் கானால் கொள்ளையிடப்பட்டதும் அன்றைய சரித்திர நிகழ்வுகள் ஆகும். இதனை கே.எஸ். லால் இவ்வாறு கூறுவார்.

‘Nusrath Khan marched with a contingent to plunder the beautiful and wealthy port of Cambay. He extracted an immense booty in bullion, jewels and other valuables from the merchants and other rich men of the city. It was here that the slave Kafur..(K.S. லால், முற்கூறிய நூல் பக்கம் 71)

குஜராத் படையெடுப்பின் போதுதான் கி.பி. 1299 இல் மாலிக்காபூர் கிடைக்கிறார். ஆனால் பத்மாவதி படத்தில், ஜலாலுத்தீன் கில்ஜியே (இவர் மரணம் 1296) அலாவுதீன் கில்ஜியிடம் மாலிக்காபூரைப் பரிசளிப்பது போன்ற காட்சி வருகிறது. இது வரலாற்று முரணாகும்; தவறாகும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

படைத்தலைவர்கள் அலப்கான், நஸ்ரத்கான், ஜபர்கான், உலூக்கான் போன்றவர்களின் திறமையினால் அலாவுதீன் கில்ஜி தன்னை மாவீரன் அலெக்சாந்தரைப் போல எண்ணிக்கொண்டு, இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்ற திட்டமிட்டார். வங்காளம், மாளவம், சிவானா, ஜாலோர், தக்காணம், தேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம் மற்றும் தென்னிந்தியப் படையெடுப்புகள் பற்றி விவரிக்கப் போவதில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.