அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

0

– வரலாற்றாய்வாளர்
செ. திவான் M.A., M.Phil.,

அலாவுதீன் கில்ஜி தனது படைகளுடன் டில்லிக்கு வடக்கேயுள்ள ‘கீலி’க்குச் சென்று பாசறையை நிறுவினார். எதிரில் மங்கோலிய குத்லூகுவாஜின் படைகள் நின்று கொண்டிருந்தன. வழக்கம்போல் அலாவுதீன் கில்ஜி தனது படைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். வலது அணியில் ஜபர்கான், இந்து அரசர்கள் மற்றும் தேர்ச்சி பெற்ற வீரர்கள் இருந்தனர். அலாவுதீன் கில்ஜியின் படையில் இந்து அரசர்கள் இருந்தனர். அவனுக்கு ஆதரவாகப் போரிட்டனர் என்பது வரலாற்று உண்மை.

இடது அணிக்கு உலூக்கான் தலைமை தாங்கினார். போரில் ஏதாவது ஒரு அணி பாதிக்கப்படுகின்றபோது இந்தப் படையினர் வந்து உதவ வேண்டும் என்பது அலாவுதீன் கில்ஜியின் கட்டளை. அலாவுதீன் கில்ஜியும் நஸ்ரத் கானும் 12,000 வீரர்களுடன் மத்திய பகுதியில் களத்தில் நின்றனர் என்று கூறிய பெரிஷ்டா, அலாவுதீன் படையில் 3,00,000 குதிரைகளும் 2,700 யானைகளும் இருந்தது என்கிறார்.

(John Briggs, MRAS, History of the Rise of the Mohammedan Power in India Till the year A.D. 1162, Translated from original Persian of Mohamed Kasim Ferishta, Adam Publishers, New Delhi, Vol I, 2006, page 186). இந்த நூல் நான்கு தொகுதிகளை உடையது. முதல் தொகுதி 360 பக்கங்கள், இரண்டாவது தொகுதி 352 பக்கங்கள், மூன்றாவது தொகுதி 328 பக்கங்கள், நான்காவது தொகுதி 423 பக்கங்கள் என மொத்தம் 1463 பக்கங்கள்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.