அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

0

அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

இராஜதரங்கிணையை ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் பலர் மொழி பெயர்த்துள்ளனர். இரஞ்சித் சீதாராம் பண்டிட் இராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது (அலகாபாத் 1935, சாகித்திய அகாடமி 1968, 1977) பண்டித ஜவஹர்லால் நேரு நீண்ட முன்னுரை எழுதினார்.

28, சூன் 1934ல் டேராடூன் சிறையிலிருந்து நேரு எழுதியதில் இருந்து சில பகுதிகள்.

இது இடைக்காலத்தைப் பற்றிய கதை. ஆயினும் மகிழ்வூட்டும் கதையன்று. இதில் அரண்மனை சூழ்ச்சி, கொலை, அரசுக்கு எதிரான சதி, உள்நாட்டுக் கலகம், கொடுங்கோன்மை இவையெல்லாம் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

சூழ்ச்சிகள், போர்கள், போர் வெறியும் காமவெறியும் கொண்ட இராணிகள் இவற்றின் ஒரு முழுக்காட்சியைக் காண்கிறோம்.

கல் ஹானர் காஷ்மீரைப் பற்றி எழுதுகிறபோது, ‘உள்நாட்டுக் கலகங்களில் திளைக்கும் நாடு’ என்று வருணிக்கிறார். இராணுவத் தளபதிகளும் சாகசப் பிரியர்களும் இக்கலகங்களை தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது பண்டித நேரு 1934இல் எழுதியது.

அன்றைய இந்தியா உள்நாட்டுக் கலகங்களில் மூழ்கியிருந்தது என்பதனை வரலாறு தெளிவாகச் சொல்கிறது.

‘ராஜதரங்கிணி’ நூல் ராஜபுத்திர குலங்களை 36 என்று பட்டியலிடுகிறது. அதற்கு சற்றுப் பிந்திய சந்த் பர்தாயின் பிருதிவிராஜராசோ என்ற நூலும் 36 ராஜபுத்திர குலங்களைப் பட்டியலிடுகிறது. ஹிந்தியின் முதல் பெருங்காப்பியம் இது. கி.பி. 1159ல் லாகூரில் பிறந்து 1192ல் மறைந்தவர் சந்த்பர்தாய். இவர் இயற்றிய பிருதிவிராஜராசோ 69 அத்தியாயங்கள் 2500 பக்கங்கள்; 10000 அடி வரை ———–செய்யுள் பத்திகளைக் கொண்டது. “இந்நூலில் நிகழ்ச்சிகள் சரித்திரத்திற்கு மாறுபட்டு காணப்படுகின்றன” என்றும் ‘‘16வது நூற்றாண்டில் எழுதப்பட்ட கற்பனைக் காவியம்” என்றும் சிலர் கருதுகின்றனர். “கோரி ஏழு முறை படையெடுத்து, பல தடவை பிருத்வீராஜிடம் தோற்று ஓடியதாக இந்த நூலில் (பிருதிவிராஜராசோ) கூறப்பட்டிருப்பது சரித்திர உண்மைக்குப் புறம்பாயிருந்த போதிலும் முடிவில் காப்பியத் தலைவனான பிருதிவிராஜனின் தோல்வியைப் பற்றி படிப்போர் உள்ளங்களில் தீவிர அனுதாபத்தை எழுப்புவதற்காக கவியின்  சுதந்திரக் கற்பனையாக இருக்கக் கூடும் என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதே” என்பார்கள் கிருஷ்ண மூர்த்தி, விஷ்ணுப் பிரியா, காமாட்சி, ஹிந்தி இலக்கிய வரலாறு, ஹிந்திஹ்ருதய சென்னை, முதற்பதிப்பு 1963, இரண்டாம் பதிப்பு 2002, பக்கம் 16, 17)

இந்த நூலில் அரபி, பார்ஸி சொற்கள் அதிக அளவில் உள்ளன. வடநாட்டில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பே முஸ்லிம்கள்  பரவலாக இருந்ததை இது உறுதிப்படுத்தப்படுகிறது.

புராணக்கதை, மக்களால் ஆர்வமாக நம்பப்படும் மரபு வழிக்கதை; கட்டுக்கதை, புராணக்கதைப் போக்கும் கலந்து எழுதப்பட்டது பிருதிராஜராசோ.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.