அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

0

அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

W

e can therefore, join hands with Ibn Batuta, the Moorish traveller and consider Ala-ud-din as ‘one of the best Sultans’ of Delhi. V.

தியாகராஜன், சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை, எழுதிய இந்திய வரலாறு ஆங்கில நூல் 1949 பக்கம் 214இல் அலாவுதீன் கில்ஜி சிறந்த சுல்தான் என்ற இபின் பதூதாவின் கூற்றை மேற்கொள்காட்டியுள்ளார்.

தொட்டவற்றில் எல்லாம் வெற்றி பெற்றவர் அலாவுதீன் கில்ஜி. ஏழைகளும் எளிதில் நீதி பெற்றிட முறை மன்றங்களை அவரது ஆட்சியில் காஜிகள் மசூதிகளில் (பள்ளிவாசல்களில்) நடத்தினார்கள். (இபின் ஹஸன், முகலாயப் பேரரசின் மைய அமைப்பு, பா. மாணிக்க வேலு (மொழி பெயர்ப்பு) சென்னை 1991, பக்கம் 364)

வரலாற்றாசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி பத்மினி கதை குறித்து கருதுவது என்ன? 1950இல் நீலகண்ட சாஸ்திரி எழுதி வெளியிட்ட மத்திய கால இந்தியா என்ற 355 பக்கங்களைக் கொண்ட நூலில் பக்கம் 43இல் தரும் செய்தி இதோ:

It is not easy to say how far the bardic tales of the beauty of Padmini, the queen of Ranaratan Singh and Ala-u-din’s efforts to possess her frustrated in the end by the horrible rite of the jauhar represent history” (K.A.Nilakanta Sastri, History of India, part II, Medieval India, Madras 1950, page 43)

ராணாரத்தன் சிங்கின் அழகிய மனைவி பத்மினி குறித்து சொல்லப்படும் பாணர்களின் பாடல்களை (தொடர்ந்து பாடிவரும் பாடல்களை) வைத்து அலாவுதீன் கில்ஜி குறித்த வரலாற்றையும் இராஜபுத்திரர்கள் இறுதியில் தீக்குளித்து மாண்டு போனதைப் பற்றியும் எளிதில் கூறிவிடக் கூடிய காரியமல்ல என்று அவர் கூறுகிறார்.

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், நி. ஸ்ரீனிவாச்சாரியும் இணைந்து எழுதிய நூல் இந்திய வரலாறு. சென்னையில் 1970இல் வெளிவந்த இந்த நூல் பல பதிப்புகள் கண்டது. 874 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் பக்கம் 354இல் அலாவுதீன் கில்ஜி பத்மினி கதை குறித்து கூறும் போது:

‘It is difficult to consider as history of bardic tales of the beauty of Padmini…’ (Nilakanta Sastri, Srinivasachari, Madras 1970, page 354)

பாணர்கள் அல்லது பாரம்பரியப் பாடல்கள் மூலம் பத்மினி பற்றிய கதையை முடிவு செய்திட, பரிசீலத்திட, வரலாற்றில் எளிதில் மனநிறைவு படுத்த முடியாத, அது ஏற்றுக் கொள்ள இயலாத, பெரு முயற்சி தேவைப்படுகிற விஷயம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸி. சத்திய நாத அய்யர் இந்திய வரலாற்றை மூன்று தொகுதிகளாகத் தந்துள்ளார். அதில் இரண்டாவது தொகுதி கி.பி. 1200 – 1700 காலகட்டத்திய வரலாறு. 1941இல் சென்னையில் அச்சிடப்பட்ட அந்த நூலின் இரண்டாவது தொகுதி 631+ஙீக்ஷிமி = 647 பக்கங்களைக் கொண்டது.  அதில் பக்கம் 40 இல் அவர் அலாவுதீன் ஆட்சி பற்றி குறிப்பிடுகிறார்.

(R. Sathianatha Aiyer, A college textbook of Indian History Volume II, AD 1200-1700 Madras, 1941)

அலாவுதீன் கில்ஜியின் அமைச்சர்களும், தானைத் தலைவர்களும் அவர்களுடைய துணிவு, பற்றுறுதி,  ஆற்றல் முதலியன காரணமாக அரசை நிலைபெறச் செய்ததுடன் அக்காலத்திய அரசியல் ஆட்சி முறைச் செய்திகளில் புகழத்தக்க மேன்மையையும் பெற்றனர். வேறு எக்காலத்திலும் நாம் காணவும்  கேட்கவும் முடியாத பல சிறப்பான நிகழ்ச்சிகளை அலாவுதீன் கில்ஜி காலத்தில் காண்கிறோம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.