அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி

0

அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

தேவகிரி

முகமது பின் துக்ளக் காலத்தில் தேவகிரி, முஸ்லிம்களால் தௌலதாபாத் என்று அழைக்கப்பட்டது. விந்திய மலைகளுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையில், வட மேற்குத் தக்காணத்தில் தேவகிரி அமைந்துள்ளது. கி.பி. 1296 பிப்ரவரி 26இல் (ரபியுல்ஆகிர் 19 ஹிஜ்ரி 695) (இதனை வரலாற்று எழுத்தாளர் பெரிஷ்டா 1294 என்று குறிப்பிட்டுள்ளார்) 4000 குதிரைகள் கொண்ட படையோடும் இரண்டாயிரம் காலாட் படையினரோடும் (8000 குதிரைப் படைகள் என்பாரும் உண்டு) அலாவுதீன் கில்ஜி தேவகிரிக்குப் புறப்பட்டார். சாஞ்தேரி வரை பகிரங்கமாக தமது படைகளை நடத்திச் சென்றார். அங்கிருந்து விந்திய மலைகளையும், குறுக்கிட்ட ஆறுகளையும் கடந்து எல்லிச்பூரை அடைந்தார்.

எல்லிச்பூர் அக்காலத்தில் யாதவர்களுடைய அரசின் வட எல்லைக் காவல் அரணாக இருந்தது. அங்கிருந்து தேவகிரி நோக்கி புறப்பட்டார். மக்கள் சந்தேகப்படாமல் இருக்க, இந்து அரசர்கள் விழித்துக் கொள்ளாமலிருக்க, டெல்லி சுல்தானத்திலிருந்து தப்பி ஓடி வந்து அடைக்கலம் தேடும் இளவரசர் நான் என்று வதந்திகளைப் பரப்பினார் அலாவுதீன் கில்ஜி.

ஜலாலுத்தீன் கில்ஜியிடம் சண்டையிட்டுக் கொண்டு, தெலுங்கானாவிலுள்ள இராஜ மகேந்திர அரசரிடம் புகலிடம் தேடிப் போய்க் கொண்டிருப்பதாக அறிவித்தார் அலாவுதீன் கில்ஜி. எனவே அவரை எதிர்த்து நின்று போராட எவரும் முன் வரவில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

 

Comments are closed.