அதிசய மன்னர் அலாவுதீன்

0

அதிசய மன்னர் அலாவுதீன்

ஷேக் நசீர் உத்தீன்

ஷேக் நசீர் உத்தீன் கி.பி. 1276-1277இல் அவுத்தில் பிறந்தவர். கி.பி. 1356 வரை வாழ்ந்தவர். தனது 43வது வயதில் நிஜாமுத்தீன் அவுலியாவைச் சந்தித்து அவரது இருப்பிடத்திலேயே சேர்ந்தார். அவர் கைர் உல் மஜாலிஸ் என்னும் நூலை எழுதியுள்ளார். இஸ்லாமிய சூபிகளைப் பற்றிக் கூறும் அந்த நூலில் பெரோஸ் ஷா துக்ளக் (1351-1386) ஆட்சியின் போது ஒரு நாள் ஷேக் நசீர் உத்தீன், காஜி ஹமீதை அவுத்தில் சந்திக்க நேர்ந்தது. உடனே அவர் தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார்.

விருந்து நிறைவேறியதும், மற்றவர்கள் சென்றபின் அலாவுதீன் கில்ஜி பற்றிய அரிய தகவல் ஒன்றை ஷெய்க் நசீர் உத்தீனுக்கு காஜி ஹமீத்கான் எடுத்துரைத்ததை தனது கைர் உல் மஜாலிஸ் பாரசீக நூலில் பக்கம் 231இல் சொல்லியுள்ளார்.

அலாவுதீன் கில்ஜியின் அறைக்குள் காஜி ஹமீத் உத்தீன் ஒரு நாள் சென்றார். அப்போது அலாவுதீன் கில்ஜி தலைப்பாகை இன்றி சிறிய நாற்காலியில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். காஜி ஹமீத் உத்தீன், அலாவுதீன் கில்ஜியின் அருகே சென்றபோதும் அதைக் கவனியாது அவர் இருந்தார். ஆகவே காஜி ஹமீத் உத்தீன் வெளியே வந்து, வெளியில் இருந்த மாலிக் காரா பெக்குவிடம் சொன்னார். உடனே மாலிக் காரா பெக் உள்ளே சென்று அலாவுதீன் கில்ஜியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். காரா பெக்கைப் பின் தொடர்ந்த காஜி ஹமீத் உத்தீனும் அலாவுதீன் கில்ஜியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். அப்போது அலாவுதீன் கில்ஜியிடம் வேண்டுகோள் ஒன்றைச் சமர்ப்பித்திட அனுமதி கேட்டார்; அலாவுதீன் கில்ஜியும் அனுமதி வழங்கினார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.