அதித்யநாத் அமைச்சரவை கூட்டம்: உ.பி. விமான நிலையங்களின் பெயர் மாற்ற முடிவு

0

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற யோகி அதித்யனாத்தின் அமைச்சரவையில் இந்திய விமானப்படைக்கு சொதமான பொதுமக்கள் பயன்படுத்தும் விமான நிலையத்திற்கு கோரக்நாத்தின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆக்ராவில் உள்ள விமான நிலையத்திற்கு பாஜக சிந்தனையாளரான தீனதயாள் உபாத்யாய் பெயரை சூட்டவும் முடிவு செய்யபட்டுள்ளது. உ.பி.யின் தற்போதைய முதல்வர் அதித்யநாத் கோரக்நாத் கோவிலின் தலைமை பூசாரி என்பது குறிப்பிடத்தக்கது.

அதித்யநாத் அரசின் மூன்றாம் அமைச்சரவை கூட்டத்தில் ஐந்து திட்டங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இவற்றுள் பாஜக சிந்தியாளர்கள் தொடர்பான இரண்டு முன்மொழிதல்கள் அடக்கம். அதில் ஒன்று பாஜக தலைவரான விஜயராஜே சிந்தியாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும் “ஏக் தி ராணி ஐசி பி” என்ற திரைப்படத்திற்கு பொழுதுபோக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிப்பது. இந்த திரைப்படம் தான் சங்க்பரிவார தலைவர் ஒருவரை மையப்படுத்தி வர்த்தக ரீதியில் வெளியாகும் முதல் திரைப்படம் ஆகும்.

Comments are closed.