அது மாட்டிறைச்சி தான், ஆனால் அகலாக் வீட்டில் இருந்து எடுக்கப்படவில்லை

0

கடந்த வருடம் செப்டெம்பர் 28 ஆம் தேதி மாட்டிறைச்சி உண்டார் என்று கூறி மனிதாபமற்ற முறையில் முஹம்மத் அகலாக் கொலைகார கும்பலால் அடித்தே கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை விட அவர் வீட்டில் இருந்தது மாட்டிறைச்சி தானா என்பதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர் அதிகாரிகள்.

இந்நிலையில் உத்திரபிரதேச தடவியல் ஆய்வகத்தில் இருந்து அளிக்கப்பட்ட கைப்பட எழுதப்பட்ட அறிக்கையில் ஆய்வுக்காக அனுப்பட்ட இறைச்சி மாட்டிறைச்சி தான் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பத்திரிகையாளர்களிடம் அளித்த எதிர் தரப்பு வழக்கறிஞர் இந்த அறிக்கைக்கான நோக்கத்தை குறித்து கேள்வி எழுப்பினார். இன்னும் அக்லாக்கின் வீட்டில் இருந்தது ஆட்டிரைச்சியா இல்லை மாட்டிறைச்சியா என்பதற்கும் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்திரிக்கை ஒன்றிடம் உத்திரபிரதேச மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட இறைச்சி மாட்டிறைச்சி தான் என்றும் ஆனால் அது அகலாக் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது இல்லை என்று கூறியுள்ளார். இன்னும் இது அக்லாக் வீட்டின் அருகே உள்ள சந்திப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், அது என்ன இறைச்சி என்பது இந்த வழக்கை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதி பா.ஜ.க உறுப்பினர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் பரிசோதனைக்காக அனுப்பட்ட இறைச்சி ஆட்டிறைச்சி தான் என்று கால்நடை மருத்துவ ஆய்வகம் கூறியிருந்தது.

Comments are closed.