அத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்!

0

அத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்!

பிரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலையான ஹாங்காங், சீனாவின் ஆதிக்கத்தில் சிக்குவதை தவிர்க்க ஜனநாயகவாதிகளும், சுதந்திரத்தை விரும்பக்கூடியவர்களும் கடந்த வாரங்களில் வீதிகளில் இறங்கிய போராடியதோடு நாடாளுமன்ற கட்டிடத்தை கைப்பற்றியதையும் உலகம் கண்டது. சர்வதேச வர்த்தக மையங்களில் ஒன்றான ஹாங்காங்கின் மீது தனது பிடியை இறுக்குவதற்கான சீனாவின் முயற்சி பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறுவதாகும் என்று ஹாங்காங் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில், சீனா போன்ற ஜனநாயக-மனிதநேயத்திற்கு எதிரான, சர்வாதிகார குணாதிசயம் கொண்ட நாட்டுடன் கையெழுத்திட முடியாது என்று ஹாங்காங் மக்கள் அறிவித்துள்ளனர்.

ஒரு நாடு இரண்டு அமைப்புமுறை (one country two system) என்பதுதான் 22 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுடன் இணைக்கப்பட்டபோது ஹாங்காங் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். ஆனால், ஒரே நாடு ஒரே அமைப்புமுறை என்பதை தங்கள் மீது திணிக்க கம்யூனிச சீனா முயற்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹாங்காங் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.