அநீதிக்குள்ளாக்கப்படும் நீதி! பாப்புலர் ஃப்ரண்ட்&ன் பொதுக்கூட்டம்!

0

அநீதிக்குள்ளாக்கப்படும் நீதி! பாப்புலர் ஃப்ரண்ட்&ன் பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 20.6.2018 புதன் மாலை 7.00மணி அளவில் கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் வைத்து “அநீதிக்குள்ளாக்கப்படும் நீதி” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இப்பொதுக்கூட்டதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்டதலைவர் அன்வர் ஹுசைன் தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் கி.ஹாலித் முகமது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, பெரியார் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், நாம் தமிழர் கட்சியின் அருண் ரங்கராசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் கி.ஹாலித் முகமது அவர்கள் தனது சிறப்புரையில் நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகால பா.ஜ.க-வின் ஆட்சியில் மக்கள் சந்தித்து வரும் பல்வேறு அவலங்களை எடுத்துரைத்தார். ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கக் கூடிய அரசு, நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகைதுறை ஆகியவை அனைத்தும் நசுக்கப்பட்டு பா.ஜ.க-வின் நோக்கங்களை நிறைவு செய்யும் ஊதுகுழல்களாக மாற்றப்படுகின்றது என்றும், நாட்டில் நடக்கும் பயங்கரவாத வழக்குகளை விசாரித்து தீவிரவாத செயல்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ. கடந்த காலங்களில் நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தபட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளை விடுவித்து வருகின்றது என்றார்.

அதே நேரத்தில் முஸ்லிம்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த பல அப்பாவிகள் நாடு முழுவதும் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்படுகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சி.பி.சி.ஐ.டி. போலிசாரால் முடிக்கப்பட்ட சசிகுமார் வழக்கை மீண்டும் விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ. எடுத்து பல அப்பாவி முஸ்லிம்களை இவ்வழக்கில் சிக்கவைக்க முயற்சி செய்து வருகின்றது. என்.ஐ.ஏ. முழுக்க முழுக்க பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் இந்துத்துவ அஜெண்டாக்களை நிறைவுசெய்யும் ஏஜென்சியாக மாறிவிட்டது என்றும் மக்கள் சக்தி மட்டுமே சங்கபரிவார ஃபாசிசத்தின் தேசவிரோத செயல்பாடுகளை தடுத்து நிறுத்தும் ஒரே வழியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். எனவே, அனைத்து ஜனநாயக சக்திகளும் தேசத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சக்திகளுக்கெதிராக ஓரணியில் திரளவேண்டும் என கேட்டுக்கொண்டார். இப்பொதுக் கூட்டத்தில் முஸ்லிம் லீக், த.மு.மு.க, ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த், ம.ஜ.க மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆகிய இயக்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பல்வேறு ஜமாத்தினர், பொதுமக்கள் என திரளானோர் கலந்துக்கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட்டின் கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் தீர்மானங்களை வாசித்தார். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முகம்மது அலியின் அவர்களின் நன்றியுரையுடன் இப்பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.

Comments are closed.