அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது – உச்ச நீதி மன்றம்

0

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமயிலான தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கிற்கான தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஆகம விதிகளுக்கு உட்பட்டுதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மே மாதம் முடிவடைந்த இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

Comments are closed.