அனைத்து பசு பாதுகாவலர்களும் இந்து தீவிரவாதிகளே – காங்கிரஸ்

0

கமலஹாசனின் இந்து தீவிரவாத கருத்துக்கு இந்து மகாசபை அதை உறுதி செய்யும் விதத்திலேயே பதிலளித்தது. தற்போது கமலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்த கருத்தை முன்வைத்துள்ளது.

அனைத்து வலது சாரி இந்து அமைப்புகளையும் பாஜக ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அனைத்து இடதுசாரி இந்து அமைப்புகளையும் பாஜக எதிர்க்கும் என்றும் அவர்கள் பசு பாதுகாவலர்களை ஆதரிப்பவர்கள் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இதனை தான் கமல் வேறுவிதமாக கூறியுள்ளார் என்றும் ஆனால் உண்மையில் இந்துத் தீவிரவாதம் உள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ், பசு பாதுகாவலர்களை தீவிரவாதிகள் என்று கூறியுள்ளார். மேலும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து மக்களை அச்சுறுத்தும் அனைவரும் பயங்கரவாதிகளே என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஆமாம், இந்து தீவிரவாதம் இருக்கின்றது. காந்தியை கொலை செய்தது யார், இந்து தீவிரவாதிகள். தலித்களையும் பிறரையும் அடித்து கொலை செய்யும் பசு பாதுகாவலர்கள் அனைவரும் இந்து தீவிரவாதிகளே. இவர்கள் மக்களை அச்சுறுத்தும் வெகு சிலர். இவர்கள் அனைவரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து சில கொள்கைகளின் அடிப்படையில் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்பவர்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், இந்து மத அடிப்படைவாதம் நம் நாட்டில் உள்ளது என்றும் அதனை நாம் எதிர்கொள்ள வேண்டுமே அல்லாது அதனை விட்டு விலகி ஓடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.