அபுதாபி பட்டத்து இளவரசர் “ஜெய் ஸ்ரீராம்” கூறியதாக பரப்பப்பட்ட செய்தி: சர்வதேச அரங்கில் அவமானப்படும் இந்திய ஊடகங்கள்

0

நரேந்திர மோடியின் அபுதாபி பயணத்தின் போது அமீரகத்தை சேர்ந்த ஒருவர் “ஜெய் ஸ்ரீராம்” என்று கூறும் வீடியோ ஒன்று இந்திய ஊடகங்களால் பரவலாக பரப்பட்டது. மேலும் இது மோடியின் அமீரக பயணத்தின் போது நடந்தது என்றும் பரப்புரை செய்யப்பட்டது.

ஆனால் இந்த வீடியோ மொராரி பாபு என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது என்று தற்போது தெரிய வந்துள்ளது. இது இந்திய ஊடகங்களுக்கு சர்வதேச அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த செய்தியை வெளியிட்ட டைம்ஸ் நவ் மற்றும் ஜீ நியுஸ் செய்தி தொலைகாட்சிகள் அந்த காணொளி பழையது தான் என்று ஏற்றுக்கொண்ட போதிலும் அந்த கானொளியில் இடம் பெற்ற நபர் அபுதாபியின் பட்டது இளவரசர் முஹம்மத் பின் சயீத் அல் நஹ்யான் என்று தெரிவித்தது. உண்மையில் குறிப்பிட்ட அந்த நபர் அமீரகத்தை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவர்.

இந்த செய்தி துபாயை மையமாக வைத்து இயங்கும் செய்தி நிறுவனமான கல்ஃப் நியுஸ் தளத்தின் பார்வைக்கு எட்ட, இந்திய ஊடகங்கள் தங்களின் அரசியல் லாபத்திற்காக போலியான வீடியோவை பரப்பி போலி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2017 இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பங்குபெற்ற இளவரசரை சரியாக அடையாளம் காண முடியாத இந்த ஊடகங்கள் பொறுப்பான பத்திரிகைத்துறையில் இருக்க தகுதியற்றவர்கள் என்றும் சாடியுள்ளது.

இந்த போலியான வீடியோ மோடியின் அமீரக வருகை ஒட்டி வெளியிடப்பட்டிருப்பது பொய்யான பரப்புரையை செய்த இந்திய ஊடகங்களின் நோக்கங்களை தெளிவாக உணர்த்துகிறது என்று கல்ஃப் நியுஸ் தெரிவித்துள்ளது. இந்த செய்தி குறித்து அமீரகத்தின் இந்திய தூதரகம் கருத்து எதுவும் தெரிவித்திராத நிலையில் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், இந்திய ஊடகங்கள் போலியான செய்தியை பரப்புகின்றன என்று பதிவு செய்துள்ளது.

இதனையடுத்து தங்களது செய்தியை ஜீ நியுஸ் நிறுவனம் நீக்கிய நிலையில், டைம்ஸ் நியு செய்தி தளம் தங்கள் செய்தியில் சிறு திருத்தத்தை மட்டும் மேற்கொண்டுள்ளது. ஆனால் தாங்கள் முன்னர் வெளியிட்ட செய்திக்கு வருத்தம் எதையும் அது தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.