அபையா அணிந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை

0

ஜம்மு கஷ்மீரில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் அபையா அணிந்ததற்காக அப்பள்ளி நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரை அபையா அணியாமல் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் இல்லையென்றால் வேலையை விட்டு செல்லுமாறும் அப்பள்ளி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மாணவர்களில் ஒரு குழு அந்த ஆசிரியையை மீண்டும் பணியமர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சர் நயீம் அக்தர் கூறுகையில், “அது ஒரு தனியார் பள்ளி. அப்பள்ளியின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்வோம்” என்று கூறியிருந்தார். மேலும் நாம் கலாச்சாரம் மற்றும் வழிபாடுகளில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் வாழ்கிறோம் என்றும் இங்கு எவரையும் குறிப்பிட்ட ஆடையை அணிய வற்புறுத்த இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்பொழுது இந்த நிகழ்வுக்கு குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும் இந்த நிகழ்வு மறைமுகமாக மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளது.

Comments are closed.