அப்துல் கரீம் துண்டா மேலும் இரண்டு வழக்குகளில் இருந்து விடுதலை

0

 

அப்துல் கரீம் துண்டா மீதான மேலும் இரண்டு வழக்குகளில் இருந்து அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 1997ல் டெல்லியின் கரோல் பாக் மற்றும் சதர் பஜாரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து அப்துல் கரீம் துண்டாவை கூடுதல் செசன்ஸ் நீதிபதி ரீத்தீஷ் சிங் விடுவித்துள்ளார்.

72 வயதான அப்துல் கரீமை லஷ்கர் இ தய்பா தீவிரவாதி என்று கூறி கைது செய்த டெல்லி காவல்துறை அவர் மீது முப்பதுக்கும் அதிகமான வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் அப்துல் கரீம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் எம்.எஸ்.கான் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 10ஆம் தேதி மற்றொரு வழக்கில் இருந்தும் அப்துல் கரீம் விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கில் தடா சட்டம், ஆயுத சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அப்துல் கரீம் மீது இன்னும் 33 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரால் தற்போது சிறையை விட்டும் வெளியே வர முடியாது.

Comments are closed.