அமித் ஷாவை விட பெரிய தீவிரவாதி எவரும் இல்லை.

0

உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது, உத்தர பிரதேச மக்கள் இந்த தேர்தலில் கசாபை ஒழிக்க வேண்டும் என்றும் கசாப் என்றால் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, மற்றும் பஹுஜன் சமாஜ் கட்சி ஆகியன என்று அவர் கூறியிருந்தார். இதற்லு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்த மாயாவதி அமித் ஷாவை விட பெரிய கசாப் இந்த நாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இன்று நம் நாட்டில், அமித் ஷா வை விட பெரிய கசாப் எவரும் இல்லை. அவரை விட பெரிய தீவிரவாதி எவராகவும் இருக்க முடியாது.” என்று கூறியுள்ளார். இதனை அம்பேத்கர் நகரில் அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவர் கூறியுள்ளார்.

இது போன்று அடை மொழிகளில் மாற்று கட்சியினரை குத்திப் பேசுவது பாஜக விற்கு புதியது ஒன்றும் அல்ல. முன்னதாக பஹுஜன் சமாஜ் கட்சியை,  பெஹன்ஜி சம்பத்தி பார்டி (BSP) என்று மோடி குறிப்பிட்டிருந்தார். அப்போதும் மோடிக்கு மாயவதி பதிலளிக்க தவறவில்லை. நரேந்திர தாமோதர் மோடியை (NDM)  Negative Dalit Man என்று அவர் கூறினார்.

மேலும் இந்த வரிசையில் சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவும் சேர்ந்துகொண்டுள்ளார். அவர் Save Country From Amith Shah and Modi (SCAM) என்று பாஜக வை விமர்சித்துள்ளார்.

Comments are closed.