அமித் ஷா சொல்ல மறந்த கதை: நீதிபதி மரணத்தில் தொடரும் மர்மங்கள்

0

அமித் ஷா சொல்ல மறந்த கதை நீதிபதி மரணத்தில் தொடரும் மர்மங்கள்

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷண் லோயாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. நீதிபதி லோயாவின் மரணத்தை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு மாதத்திற்குள் முக்கிய குற்றவாளியான பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். (விரிவான விபரங்களுக்கு புதிய விடியல் பிப்ரவரி 1-&15 மற்றும் 16&-28 இதழ்களை காணவும்). நீதிபதியின் மரணத்தில் இருந்த சந்தேகங்களை தி கேரவன் இதழ் கடந்த நவம்பர் மாதம் தனது இணையதளத்தில் முதலில் எழுப்பியது. தற்போது அதன் பத்திரிகையாளர் நிகிதா சக்சேனா, இரண்டு மாதங்களாக லோயாவின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் 14 பேரிடம் பெற்ற தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கை மீதான சந்தேகங்களை வலுக்கச் செய்கின்றன.

டிசம்பர் 1, 2014 அன்று காலை நீதிபதி லோயாவின் பிரேத பரிசோதனையை அக்கல்லூரியின் தடயவியல் மருத்துவத்துறை ஆசிரியர் மருத்துவர் தும்ராம் மற்றும் முதுநிலை மாணவர் அமித் தம்கே ஆகியோர் மேற்கொண்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் அன்றைய தினம் இவர்களுடன் இணைந்து தடயவியல் மருத்துவத்துறையின் பேராசிரியர் மருத்துவர் மகாரந்த் வியாவகாரே பிரேத பரிசோதனையை நடத்தியதாகவும் அறிக்கை அவருடைய கட்டளையின் பிரகாரம்தான் தயார் செய்யப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா அரசாங்கத்தில் அதிகாரத்தில் இரண்டாவது நிலையில் உள்ள நிதி அமைச்சர் சுதீர் முன்கன்திவாரின் உறவினரான வியாவகாரே தற்போது நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியின் தடயவியல் துறையின் தலைவராக உள்ளார். (வியாவகாரேயின் சகோதரியை முன்கன்திவார் திருமணம் செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவரான முன்கன்திவார் நிதி, வனம், திட்டமிடல் என மூன்று துறைகளை தன் வசம் வைத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இவரும் -விதர்பா பகுதியின் சந்திராபூரை சேர்ந்தவர்கள்).

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.