தலைவர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும்

0

தலைவர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஹிந்தி கவிஞரும் பா.ஜ.க வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஓம்பால் சிங், பீகார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அமித்ஷா பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார். அவருக்கு பதிலாக உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உத்தர பிரதேசத்தில்தான் அதிகளவு மக்களவை தொகுதிகள் உள்ளன. அதனால் பா.ஜ.க. தங்கள்  தலைவரை இங்கிருந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் “டில்லியில் தோற்றோம் பின் பீகாரில் தோற்றோம். ஆனால் அமித்ஷா இன்னும் தலைவர் பதவியில் அமர்ந்துள்ளார். அவர் அடுத்த தோல்விக்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“மோடிக்கு அமித்ஷா மிக அவசியமாக வேண்டுமென்றால் அவரை தன் தனிப்பட்ட ஆலோசகராக வைத்துக்கொள்ளட்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.