அமெரிக்காவில் இமாம் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொலை

0

அமெரிக்காவின் நியுயார்க் நகர பள்ளிவாசல் ஒன்றின் இமாம் மெளலானா அகோன்ஜி மற்றும் அவரது உதவியாளர் தராவுத்தீன் ஆகியோர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மிக அருகில் வைத்து( Point Blank) அவர்களது தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் தங்களது லுஹர் தொழுகையை (மதிய தொழுகை) முடித்துவிட்டு செல்கையில் இந்த கொலை நடந்துள்ளது. இதுவரை இந்த கொலை தொடர்பாக எந்த ஒரு கைதும் நடைபெறவில்லை.

கொலைகாரன் இவர்கள் சுடப்பட்ட இடத்தில் இருந்து கையில் துப்பாக்கியுடன் ஓடியதை மக்கள் கண்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கொலை குறித்து மேலும் தகவலை பெரும் பொருட்டு கண்காநிப்ப்[உ கேமரா பதிவுகளையும் கனால் பார்த்தவர்களின் சாட்சியங்களையும் ஆராய்ந்து வருகின்றோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவென்று முடிவு செய்யும் அளவிற்கு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது. கொலை நடந்த போது இமாமிடம் 1000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருந்ததாகவும் ஆனால் கொலைகாரன் அதனை எடுக்கவில்லை என்றும் அதனால் இது ஒரு திருட்டுசம்பவமாகவோ அல்லது கொள்ளை சம்பவமாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் பல்களாதேஷி முஸ்லிம் சமூகத்தினர் இமாமின் கொலையை வெறுப்புக் குற்றமாக கருத வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதே போல கடந்த வருடம் இரண்டு முஸ்லிம் மாணவர்கள் அமெரிக்காவின் வடக்கு கரோலின பல்கலைகழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது பார்கிங் தொடர்பான தகராறால் ஏற்பட்ட பிரச்சனை என்று காவல்துறை கூறியது. ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே கொலை செய்யப்பட்டனர் என்று கூறினர்.

சமீபகாலமாக அமெரிக்காவில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு (இஸ்லாமோ ஃபோபியா) பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் போன்றோரின் வெறுப்புப் பேச்சும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.