அமெரிக்காவில் ஐஎஸ் தீவிரவாதி என்று கோஷமிட்டு பங்களாதேச முஸ்லிம் மீது தாக்குதல்

0

அமெரிக்காவில் வசிக்கும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முஸ்லிமான முஜிபுர் ரஹ்மான் தனது ஒன்பது வயதே நிரம்பிய மருமகளுடன் அவள் படிக்கும் பள்ளிகூடத்தில் இருந்து வீடு திரும்புகையில் சில அமெரிக்க இளைஞர்களால் மிக கொடூரமாக தாக்க பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து கடந்த வெள்ளி கிழமை நியு யார்க் காவல் துறையிடம் அவர் புகார் அளித்து கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று என்னை நோக்கி ஐஎஸ் ஐஎஸ் என்று கூறியாவாரே அந்த இளைஞர்கள் தன்னை தாக்கியதாகவும் அந்த தாக்குதலில் இருந்து தான் இன்னும் மீண்டு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன் மருமகளுக்கு புற காயங்களும் இன்னும் உளவியல் ரீதியான அச்சமும் மேலோங்கி இருப்பதால் இரவு அவள் உறங்க மறுப்பதோடு இனி பள்ளிக்கூடமே செல்ல மாட்டேன் என்றும் கூறுவதாக தெரிவித்தார்.

இது குறித்து நியூயார்க் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து தேடுதலை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ப்ராங்க்ஸ் கவுன்சிலர் லூயிஸ் செபுல்டா கூறுகையில் “தாக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் யாரையும் தாக்கவோ துன்புறுத்தவோ கூடியவர் அல்ல,மேலும் இது போன்ற நிகழ்வுகளை எந்நிலையிலும் நாம் அனுமதிக்க முடியாது என்பதோடு இது போன்ற நிகழ்வுகள் தடுத்து நிறுத்த படவேண்டும்” என கருத்து தெரிவித்தார்.

சமீப காலங்களாக அமெரிக்க முஸ்லீம்கள் ஐஸ்ஐஸ் தீவிரவாத இயக்க ஆதரவாலற்களால் நடத்த படும் தாக்குதலுக்காக குற்றம் சுமத்த படுவதோடு,அந்த இயக்கங்களோடு அவர்களை தொடர்பு படுத்தும் முயற்சிககளும் அதிகரித்தும் உள்ளன.

தன்னை தாக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்த படுவார்கள் என தான் நம்புவதாக முஜீபுர் ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.