அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்தியர்

0

இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஹூஸ்டன் நகரில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் நாதன் தேசாய். இவர் கடந்த திங்கள் கிழமை அதிகாலை 6:30 மணியளவில் நாஜி ராணுவ உடுப்புகளை அணிந்து வாகனங்களில் செல்வோர் மீது தான் வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தாம்ப்சன் ரக எந்திர துப்பாக்கி என இரண்டு துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இவரிடம் மொத்தம் 2600 தோட்டாக்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தனது வாகனத்திற்கும் ஒரு மரத்திற்கும் நடுவில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அவர் மீது காவல் துறையினர்  எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மீதும் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் நாதன் தேசாய் கொல்லப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றும் ஆனால் காயமடைந்த ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தற்போது வெளியான தகவலின் படி தேசாய்க்கும் அவர் பணியாற்றி வந்த நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் அதில் வெறுப்புற்ற அவர் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தற்போது நடந்துள்ள இந்த துப்பாக்கிச்சூடு 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய வம்சாவழியைச் சேந்த ஒருவர் நடத்தியுள்ள இரண்டாவது துப்பாக்கிச்சூடு நிகழ்வாகும். 2003 இல் கேஸ் வெஸ்டெர்ன் ரிசர்வ் பல்கலைகழகத்தில் பயின்று வந்த பிஸ்வந்த் ஹல்டர் என்பவர் பல மாணவர்களை கொன்றும் பணையக் கைதிகளை பிடித்து வைத்தும் தாக்குதல் நடத்தினார். காவல்துறையினர் அவரை உயிருடன் பிடித்து சிறையில் அடைத்தனர்.

 

Comments are closed.