அமெரிக்காவில் நுழைய இரண்டு கஷ்மீரி பனிசறுக்கு வீரர்களுக்கு தடை

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய குடியேற்ற சட்டத்தால் அமெரிக்காவில் நுழைய இரண்டு காஷ்மீரி விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாரணக் ஏரி கிராமத்து மேயர் கிளைட் ராபிடியு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இந்திய பனி சறுக்கு வீரர்களுக்கு அமெரிக்கா வர தற்போதைய அமெரிக்க அரசுக் கொள்கையால் விசா மறுக்கப்பட்டுள்ளது. இதனை கஷ்மீரில் உள்ள நம் நல்ல நண்பர் ஆபித் கான் மூலமாக தெரிந்துகொண்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

விசா குறித்து ராபிடியுவிற்கு செய்தி அனுப்பிய ஆபித், “மன்னிக்கவேண்டும், விசா மறுக்கப்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார். தங்கள் இருவர் தொடர்பான  அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டும் இது ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது ஆவணங்களை சோதித்து பார்த்த புது டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒரு அறைக்குள் சென்றார் என்றும் பின்னர் அங்கிருந்து வெளியே வந்த அவர், “மன்னிக்கவும், எங்களுடைய தற்போதைய குடியேற்ற கொள்கையின் படி உங்களுக்கு விசா வழங்க முடியாது” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விசா மறுக்கப்பட்டுள்ள ஆபித் கான் மற்றும் தன்வீர் ஹுசைன் ஆகியோர் 2017 பிப்ரவரி 24-25 இல் நடக்க இருக்கும் உலக பனிசறுக்கு போட்டியில் பங்கேற்க இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகத்திடம் இருந்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Comments are closed.