அமெரிக்காவில் முஸ்லிம் பெண் குத்திக் கொலை

0

அமெரிக்கவில் பெருகி வரும் இஸ்லாமோ போபியயாவிற்கு மீண்டும் ஒரு உயிர் பலியாகியுள்ளது.  பங்களாதேஷை பூர்வீகமாக கொண்ட 60 வயது முஸ்லிம் பெண்மணி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது பங்களாதேஷை சேர்ந்த ஒரு இமாமும் அவரது நண்பரும் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு வாரங்களில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

முன்னாள் பள்ளி ஆசிரியையான நஸ்மா கணம் மற்றும் 75  வயது நிரம்பிய அவரது கணவரும் இரவு 9:15 அளவில் தங்களுடைய கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை எடுத்து வரும் போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவர்கள் இருவரும் தங்களது வீட்டிற்கு மிக அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அவரது கணவர் நஸ்மா வின் இதயத்தில் கத்தி சொருகப்பட்ட நிலையில் அவரை கண்டுள்ளார். பலமான காயங்களுடன் தனது கணவர் மடியில் இரத்தம் சொட்டும் நிலையில் “என்னை யாரோ கொன்றுவிட்டார்கள்” என்று நஸ்மா கூறியுள்ளார். சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது மனைவியின் பிரிவை தாங்க முடியாத கான், “என் மனைவி கொல்லப்படுவதற்காக இந்நாட்டிற்கு வந்துள்ளார். நாங்கள் பங்களாதேசில் நன்றாக வாழ்ந்து வந்தோம்” என்று கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட போது நஸ்மா பாரம்பரிய இஸ்லாமிய உடுப்பில் இருந்துள்ளார். மேலும் கொலையாளி நஸ்மாவிடமிருந்து அவரது பணத்தையோ அலல்து அலைபேசியையோ பறித்துச் செல்லவில்லை. ஆகையால் இது இஸ்லாமிய வெறுப்பினால் ஏற்பட்ட கொலை என்று நஸ்மாவின் உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் இது கொள்ளை சம்பவத்தில் ஏற்பட்ட கொலையாக இருக்கலாம் என்று கூறிவருகிறது.

நஸ்மா மற்றும் அவரது குடும்பத்தினர் 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.

Comments are closed.