அமெரிக்காவில் விமான பணிப்பெண்ணை “பார்த்ததற்காக” இரண்டு முஸ்லிம் பெண்கள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்

0

போஸ்டானில்  இருந்து லாஸ் ஏஞ்ஜலஸ் நகருக்கு ஜெட் புளூ விமானத்தில் பயணித்த இரு முஸ்லிம் பெண்கள் விமான பணிப்பெண்களை உற்றுப்பார்த்தனர் என்று கூறி காவல்துறையினரால் விமானத்தில் இருந்து இறக்கப் பட்டனர்.

அந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் இது குறித்து கூறுகையில் “விமானப் பணிப்பெண்களில் ஒருவர் மற்றவரிடம் அந்த பெண் என்னை உற்றுப்பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுவதை கேட்டேன்” என்றும் “ஆனால் இதனை கூறும் போது அந்த பணிப்பெண் அச்சத்தில் இருந்தது போல தெரியவில்லை, சாதாரணமாகவே அதனை கூறினார்” என்றும் கூறியுள்ளார்.

விமானம் தரை இறக்கப்பட்டதும் அந்த பணிப்பெண் “அதிகாரிகள் இப்போது விமானத்திற்குள் வருவார்கள் என்றும் அதுவரை யாரும் எழும்ப வேண்டாம்” என்றும் கூறியதாக கூறியுள்ளார்.

இறக்கப்பட்ட முஸ்லிம் பெண் பயணிகள் குறித்து அவர் கூறுகையில், “அவர்கள் சராசரி பயணிகளைப் போலவே பயணித்தனர், படம் பார்த்தனர், அவர்களை இவ்வாறு நடத்தியது சற்று அதிகப்படியான நடவடிக்கை போல தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ஜெட் புளூ விமான நிறுவனம் கூறுகையில், விமானப் பணிப்பெண்ணிற்கு அந்த பயணிகள் விமான நடவடிக்கைகளை படமெடுப்பது போல் தோன்றியதாகவும் அதனால் தான் அதிகாரிகள் வரவழைக்கப் பட்டதாகவும் இது நடைமுறையில் உள்ளது தான் என்றும் அமைதி காத்து ஒத்துழைத்த பயணிகளுக்கு நன்றி எனவும் கூரியிருகின்றது.

அமெரிக்காவில் இஸ்லாமோஃபோபியாவின் உச்ச கட்டமாக ஒரு முஸ்லிம் மற்றவரை பார்ப்பது கூட அதிகாரிகள் அவரை சோதனையிட காரணமாக அமையும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

Comments are closed.