அமெரிக்கா: குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிக்கு மரண தண்டனை

0

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் 2013ல் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர், இருநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கின் குற்றவாளியான டோகர் ஸர்னயேவ்விற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்றப்படும்.
ஏழத்தாழ பத்து வாரங்கள் நடைபெற்ற இந்த விசாரணையில் 150 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஸர்னாயேவ் இதனை செய்ததாகவும் அவனை அல் காய்தாவை சேர்ந்தவன் என்றும் அரசு தரப்பு கூறியது.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸர்னாயேவ்வின் சகோதரன் டமர்லான் சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்கு பின்னர் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டான்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு ஸர்னாயேவ்விற்கு உள்ளது. போஸ்டான் பகுதி மக்கள் மரண தண்டனைக்கு எதிராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்று கூறுகின்றனர்.

Comments are closed.