அமெரிக்கா: கோயிலை சேதப்படுத்திய கயவர்கள்

0

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோயிலின் சுவர்களிலும் ஆட்சேபகரமான படங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டல்லாஸ் காவல்துறை அறிவித்துள்ளது.
கோயிலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய அங்குள்ள இந்துகளும் இந்துகள் அல்லாதவர்களும் முன் வந்துள்ளனர். இது போன்ற சம்பங்கள் இனி ஏற்படாமல் தடுப்பதற்கு கோயிலை சுற்றி வேலி அமைக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த மூன்று மாதங்களில் கோயில்கள் மீதான தாக்குதல்கள் இதுவரை மூன்று நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.