அமெரிக்க சுதந்திர தேவி சிலையில் பெண் உருவம் முஸ்லிம் பெண்ணுடையது!

0

அமெரிக்காவின் வளர்ச்சியின் அடையாளமாகவும், தேசிய நினைவுச் சின்னமாகவும் திகழ்வது ’ஸ்டாச்சு ஆஃப் லிபர்டி’ என்றழைக்கப்படும் சுதந்திர தேவி சிலை. இச்சிலையில் பெண் உருவமாக இருப்பது எகிப்தைச் சார்ந்த முஸ்லிம் பெண் விவசாயி என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் ’த டெய்லி பீஸ்ட்’ என்ற பத்திரிகையில் ’மைக்கேல் டேலி’ என்பவர் இது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

19-ஆம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்,இது சுகந்திர தேவி சிலை அமெரிக்கைவின் நியூயார்க் நகரின் துறைமுக நுழைவு வாயிலில் உள்ளது.

சூயஸ் கால்வாயின் நுழைவு வாயிலில் இச்சிலையை நிறுவ விரும்பியே இச்சிலையை வடிவமைத்த பிரெடரிக் ஆகுஸ்டே பார்த்தோல்டி இச்சிலையின் சித்திரத்தை வரைந்தார்.எகிப்திய விவசாய பெண்ணொருவர் விளக்கை உயர்த்திப்பிடித்துக்கொண்டு நிற்கும் நிலையில் இச்சித்திரம் வரையப்பட்டது.ஒரே நேரத்தில் வளர்ச்சியின் சின்னமாகவும், வெளிச்சத்தையும் தரும் கலங்கரை விளக்கமாக அதனை அவர் சித்தரித்திருந்தார்.ஆனால், அக்காலத்தில் எகிப்திய ஆளுநரான இஸ்மாயீல் பாஷா இதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை.சிலையை நிர்மாணிக்கும் திட்டத்தை கைவிட்ட பிரெடரிக் பின்னர் அமெரிக்காவிற்கு சென்றார்.
முதலில் மன்ஹாட்டனில் அல்லது செண்ட்ரல் பார்க்கில் இச்சிலையை நிறுவ அவர் விரும்பினார்.பின்னர் அவர் இன்று லிபர்டி தீவு என்றழைக்கப்படும் பெல்தே தீவை சிலையை நிறுவும் இடமாக தேர்வுச் செய்தார்.முஸ்லிம் பெண்ணை ‘லேடி லிபர்டி’ என்றழைத்ததோடு, எகிப்திய விவசாய பெண் அமெரிக்காவின் சுதந்திர சின்னமாகவும் மாறினார்.

அமெரிக்காவில் நுழைபவர்களை வரவேற்கும் தோரணியில் நிற்கும் இச்சிலையை கொண்டாடுபவர்கள் அகதிகளுக்கு எதிராக துவேசத்தை பரப்புரைச் செய்வதை ’த டெய்லி பீஸ்ட்’ கட்டுரை விமர்சிக்கிறது.முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறவேண்டும் என்று கூறும் அரசியல்வாதிகள் இச்சிலையையும் நாடுகடத்துவார்களா? என்ற கேள்வியை இச்சிலைக்குறித்த ஆச்சரியமான தகவல் எழுப்புகிறது.

Comments are closed.