அமெரிக்க FBI மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல்களை வெளியிட்ட ஹேக்கர்கள்

0
DotGovs என்று தங்களை அழைத்துகொள்ளும் ஹேக்கர் குழு ஒன்று அமெரிக்க FBI அதிகாரிகள் மற்றும் DHS என்றழைக்கப்படும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் பெயர்,தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் 22,175 FBI அதிகாரிகளின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்களை “lol” என்ற பாஸ்வோர்டை கொண்டு மறையாக்கம் (என்கிரிப்ட் ) செய்து வெளியிட்டுள்ளனர். இது 9,372 உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை தகவல்களையும் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் அவர்கள் பெற்றது தான் அதிர்ச்சி. டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இன் கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரியின் மின்னசல் மூலம் FBI அதிகாரிகளுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள நெட்வொர்க்கின் அனுமதியை இந்த ஹாக்கர் பெற்றுள்ளார். அதிலிருந்து டெராபைட் கணக்கிலான தரவுகள் அவரின் கைகளுக்கு சிக்கியுள்ளன. இதில் 200 ஜி.பி. தரவுகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து synack என்ற Cyber Security நிறுவனத்தின் இயக்குனர் கருத்து தெரிவிக்கையில், இது போலியானது என்று கருத எந்த காரணமும் இல்லை. அந்த ஹாக்கர் வெளியிட்ட பட்டியலில் உள்ள ஒரு அதிகாரியின் பெயரை எடுத்து அவர் முன்பு பணியாற்றிய துறைகளின் வரலாறையும் ஒப்பிட்டு பார்த்தால் இந்த பட்டியல் உண்மை என்றே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

எது எப்படியானாலும் இந்த தகவல் பட்டியல் உண்மையென்றால் அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிகள் மூலம் மேலும் பலர் இலக்காக்கப் படலாம் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: தொழில்நுட்பம்

Comments are closed.