அமைச்சர்களின் குற்றப் பின்னணி!

0

அமைச்சர்களின் குற்றப் பின்னணி!

நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள புதிய ஆட்சியில் அமைச்சர்களாக பதவியேற்றவர்களில் 39 சதவிகிதத்தினர் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் என்றும் 29 சதவிகிதத்தினர் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் என்றும் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் இந்த எண்ணிக்கை முறையே 31 மற்றும் 17 சதவிகிதமாக இருந்தது. கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என மொத்தம் 58 அமைச்சர்கள் மோடி தலைமையிலான அரசாங்கத்தில் புதிய அமைச்சர்களாக மே 31 அன்று பதவியேற்றனர். 56 அமைச்சர்களில் (ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடையாது) 22 அமைச்சர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் 16 அமைச்சர்களுக்கு எதிராக கடுமையான கிரிமினில் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களில் குறிப்பிட்ட தகவல்களில் இருந்து இந்த விபரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலம் தண்டனையை பெற்றுத் தரும் குற்றங்கள், ஜாமீனில் வெளி வரமுடியாத குற்றங்கள், தேர்தல் விதிமீறல்கள், அரசிற்கு இழப்பை ஏற்படுத்துதல், கொலை, கடத்தல், பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் குற்றமாக குறிப்பிடப்பட்டவை, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை கடும் குற்றங்களாக வரையறைபடுத்தப் பட்டுள்ளன.

இதில் மாநிலங்களவை உறுப்பினரான முரளிதரன் (மகாராஷ்டிரா) தனக்கெதிராக கொலை முயற்சி வழக்கொன்று உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அமைச்சர்கள் கிரிராஜ் சிங், பிரதாப் சந்திர சாரங்கி, பாபுல் சுப்ரியோ, நித்யானந்த் ராய் மற்றும் பிரஹாலத் ஜோஷி ஆகியோர் மீது இரு சமூகங்கள் இடையே பகையை ஏற்படுத்துவது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவற்றில் மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமித் ஷாவின் குற்றப் பின்னணி மிக முக்கியமானது. 2001ல் குஜராத்தின் முதல்வராக மோடி பதவியேற்பதற்கு முன்னரே அவரின் நெருங்கிய சகாவானார் அமித் ஷா. தனது பதினேழாவது வயதில் அகமதாபாத்தின் நராண்புராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் மோடியை சந்தித்தார் அமித் ஷா. மோடி அப்போது அகமதாபாத் பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு பொறுப்பாளராக இருந்தார். அமித் ஷா, அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பில் இருந்தார். அன்று தொடங்கிய இவர்கள் பந்தம் நான்கு தசாப்தங்களாக தொடர்கிறது. முதல்வர் பதவியை மோடி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அமித் ஷா, குஜராத் அமைச்சரவையில் ஏறத்தாள பத்து இலாகாகளை தன் வசம் வைத்து தனி ராஜாங்கம் நடத்தியவர். இஸ்ரத் ஜஹான், சொஹ்ராபுதீன் ஷேக் என அடுக்கடுக்கான என்கௌண்டர் வழக்குகளில் அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தவிர, அரசியல்வாதிகள் மற்றும் கிரிமினல்கள் உள்ளடக்கிய பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வந்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சொஹ்ராபுதீன் ஷேக் என்கௌண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ, 2010ல் அமித் ஷாவை கைது செய்தது. சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்த போதும் அவர் குஜராத்திற்குள் நுழையக் கூடாது என்று தடை விதித்தது நீதிமன்றம். 2013ல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். அதன் பின் எல்லாம் மாறின. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.